விடை தா- காதலுக்கு.
நிலவிற்கு
காத்திருக்கும் முல்லையாய்,
கதிருக்கு
காத்திருக்கும் ஆம்பலாய்,
உனக்காய்
உன் கடைக்கண்
பார்வைக்காய் -
அது தரும் விடைக்காய் -
உன் காதலுக்காய் -
உன்னால்
வரும் சம்மதத்தால்,
என்னில் எழும்
கவிதைக்காய் -
காத்திருக்கிறேன்.
விடை தா -
ஒன்று என்
காதலுக்கு -
இல்லையென்றால்
என் உயிருக்கு. to me
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.