Sunday, 29 July 2012


அவள் பெயர் தோழி 

எப்போதோ வரும் தேர்விற்கு இப்போதே 
என்னை படிக்க சொல்கிறாள் 

எப்போதோ வரும் உடல் நல குறைவிற்கு இப்போதே 
பயப்படுகிறாள் 

வலிக்காமல் அடித்திருப்பாள் 
நடிக்காமல் துடித்திருப்பாள் 
எனக்காக அழுதிருக்காள் 
எனக்காக நீண்ட நேரம் காத்திருப்பாள் 

அவளுக்காக உணவை எனக்காக கொடுத்திருக்கால் 

என்னிடம் எதையும் எதிர் பார்த்ததில்லை 

என்னை யாரிடம் விடு கொடுத்ததும் இல்லை 

எனக்காக எத்தனையோ முறை யாரிடமாவது விவாதித்து இருப்பாள் 

என்னை திட்டும் உரிமை அவளுக்கே கொடுக்க பட்டது 

எனக்காக அவள் அருகில் இப்போதும் இடம் பிடித்தேன் வைப்பாள் 

எனக்காக நிறைய பொய் சொல்லி இருப்பாள் என்வீட்டிலேயே 

எப்போதும் என்னை வெறுத்ததில்லை 

நட்பு என்ற வார்த்தையை அதிகாரத்தில் சேர்த்தவள் அவளாக இருக்கும் 

தோழி என்ற சொல்லுக்கு அர்த்தம் தந்தவள் 

அவள் தான் என் தோழி. (இந்த கவிதை என்அன்பு தோழி jessie ku 

சமர்ப்பணம் ) 


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.