அன்பு தோழியே !
அன்பின் பொருளாய் விளங்கிய
என் அன்பு தோழியே !
பாசம் என்னும் சிறையில்
என்னை அடிமை கொண்டாய் ,
தென்றலை போல் எங்கும்
இனைந்தே உலா வந்தோம் ,
சோகம் என்னும் சொல்லை
மறந்தேன் உன் தோலில் சாய்திருந்தால்,
இருவரும் கொண்டிருந்த
அளவு மிகு அன்பினாலோ ,
பின் ஒரு நாள் சண்டை கொண்டோம்
என் புன்னகையில் இருந்த நீ
என் அழுகையில் , கண்ணீர் துளி போல
கரைந்து மறைந்தது ஏன்?
கை கோர்த்து நடந்தோம்
உன் பிரிவினால் தனியே நடக்க பழகினேன் ,
தவறு என் பங்கு என்றாலும்
பிரிவு என்னும் இத்தனை பெரிய தண்டனை
ஏனடி எனக்கு தந்தாய் என் அன்பு தோழியே ?by me
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.