செங்கிஸ் கான் (1162 அல்லது 1155 – ஆகஸ்டு 18, 1227) மங்கோலியப் பேரரசைத் தாபித்த மங்கோலிய அரசராவார். 1206 இல் மங்கோலிய துர்கிய இனக்குழுக்களை இணைத்து மங்கோலியப் பேரரசை இவர் அமைத்தார். இவர் சிறப்பாக ராணுவத்தை அணிவகுக்கச் செய்வதிலும் உலகளவில் பாராட்டப்பட்டார். உலக வரலாற்றின் மிகவும் குறிப்பிடத்தக்க இராணுவத் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.
[தொகு]ஆட்சி
1167 - ஆம் ஆண்டு பிறந்த இவரது இயற்பெயர் தெமுசின் போர்சிகின் என்பதாகும். 1187 - ஆம் ஆண்டு செங்கிஸ்கான் என்ற பட்டப்பெயர் பெற்றார். இதற்கு 'அண்டத்தின் சக்கரவர்த்தி' என்பது பொருள்.இவர் 1198- ஆம் ஆண்டு தன் தந்தையின் நண்பர்களுடனும் சீனாவைச் சார்ந்த ஜின் என்னும் அரச வம்சத்துடனும் கூட்டணி வைத்துக்கொண்டார். 1200 தொடங்கி 1202 - ஆம் ஆண்டு வரை நடைபெற்ற யுத்தத்தில் தனது குழந்தை பருவ நண்பனான ஜமுகாவை வென்றார். அதே ஆண்டில் டார்டாரையும் வெற்றி கொண்டார். தொடர்ந்து 1206 - ஆம் ஆண்டு மங்கோலிய பேரரசராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1211 - ஆம் ஆண்டு ஒப்பந்தம் முறிந்ததையடுத்து செங்கிஸ்கானின் படைகள் ஜின் அரச வம்சத்தை முற்றுகையிட்டன. மீண்டும் 1214 - ஆம் ஆண்டு ஜின் அரச வம்சத்துடன் அமைதிக்கான நடவடிக்கை எடுத்தார். ஆனால், தொடர்ந்து வந்த ஆண்டிலேயே ஜின் அரச வம்சத்தைத் தாக்கி அதன் அரசரை நாட்டை விட்டுத் துரத்தினார்.
1216 முதல் 1221 வரையிலான ஆண்டுகளில் மங்கோலிய அரசாட்சியை மேற்கு திசையிலும் விரிவுபடுத்தினார். தற்போதைய ஆப்கானிஸ்தான், ஈராக் வரையிலும். தெற்கு ரஷ்யா வரையிலான பகுதிகளுக்கும் அவர் அரசரானார். 1221 - ஆம் ஆண்டில் ஐலல்-அல்-டின் என்பவரை வென்று தன் இராஜியத்தை உலகில் மிகப்பெரியதாக ஆக்கினார்.1226 - ஆம் ஆண்டு ஜின் அரசன் மீண்டும் தன் படையுடன் செங்கிஸ்கானைத் தாக்கினான். ஆனால், செங்கிஸ்கான் அவனை வென்றார்.
1227 - ஆம் ஆண்டு செங்கிஸ்கான் தனது 72 ஆவது வயதில் இறந்தார். இவரது இறப்புக்கான காரணம் சரியாக அறியப்படவில்லை.
செங்கிஸ் கான் Genghis Khan | |
மங்கோலியப் பேரரசன் | |
---|---|
ஆட்சிக்காலம் | 1206–1227 |
முடிசூட்டு விழா | 1206 (மங்கோலியாவின்அனாண் ஆற்றில்குறுல்த்தாய் என்னும் இடத்தில் |
முழுப்பெயர் |
(இயற்பெயர்:தமுஜின்) மங்கோலிய மொழியில் வலது. |
பட்டங்கள் | கான், ககான் |
பிறப்பு | அண். 1162 |
பிறப்பிடம் | கெண்டீ மலைகள்,மங்கோலியா |
இறப்பு | 1227 (அகவை 65) |
பின்வந்தவர் | ஒகோடி கான் |
துணைவர் | போர்ட்டி உஜின் குலன் யிசுஜென் யிசுய் மற்றும் பலர் |
வாரிசுகள் | ஜோசி ஜகாடேய் ஒகோடி டோளுய் பலர் |
அரச குடும்பம் | போரிஜின் |
தந்தை | எசுக்கெய் |
தாய் | ஓவெலுன் |
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.