Wednesday, 25 July 2012

பழசி இராசா


வீர கேரள வர்மா பழசி இராசா (Pazhassi Raja, அல்லது கேரளச் சிங்கம்சனவரி 31753 - நவம்பர் 301805கேரளாவின் வடக்கில் உள்ள கண்ணூர் மாவட்டத்திலுள்ள தற்கால கூத்துப்பரம்பு பகுதியில் அமைந்துள்ள கோட்டயம்-மலபார் நாட்டின் மன்னராக இருந்தவர். பிரித்தானியக் குடியேற்றவாதத்தை எதிர்த்துப் போராடிய துவக்க கால விடுதலை வீரர்களில் ஒருவர். பிரித்தானியர்களுக்கு எதிராக அவர் நிகழ்த்திய மறைவுத் தாக்குதல்களில் உயிர்விட்டதை அடுத்து அவருக்கு வீர என்ற அடைமொழி வழங்கப்பட்டது.
பழசிராசாவின் இளமைக்காலம் பற்றிய குறிப்புகள் கிடைப்பதில்லை. துவக்கத்தில் பிரித்தானியருக்கு திப்பு சுல்தானுடன் நடந்த சண்டையில் உதவிய பழசிராசா பின்னர் அவர்களுடன் பிணக்கு கொண்டார். விடுதலை போராட்டமாக இல்லாது அவர்களது வரிவிதிப்பிற்கு எதிரான புரட்சியாக 1793-1797 காலகட்டங்களில் வெடித்ததாக வரலாற்று நூல்கள் கூறுகின்றன.[1]


பழசி இராசா
Pazhassi Raja
பழசி கோட்டய இளவரசர்
VeeraPazhassi.JPG
வீர பழசி இராசா-கற்றளி ஓவியம்
ஆட்சிக்காலம்1774 - 1805
முழுப்பெயர்கேரள வர்மா பழசி இராசா
பட்டங்கள்கேரளச் சிங்கம்
பிறப்புசனவரி 3, 1753
பிறப்பிடம்கண்ணூர்கேரளம்
இறப்புநவம்பர் 30, 1805
முன்னிருந்தவர்வீரவர்மா (முதியவர்)
பின்வந்தவர்வீரவர்மா (மருமகன்)
சமய நம்பிக்கைகள்இந்து

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.