கைகோர்த்து சென்றோம்
தோள்சாய்ந்து வாழ்ந்தோம்
ஒரே நிழலில் நின்றோம் !
உன்னால் கவலைகளை மறந்தேன்
மகிழ்ச்சியில் மிதந்தேன்
வாழ்க்கையில் யாவும் அடைந்தேன் !
உன்னால் என்வாழ்க்கைக்கு அர்த்தம் கிடைத்தது
இருந்தும்
இயற்க்கை -ஏன்
உன்னை பிரித்து சென்றது
நண்பனே..
உன்னை என்கரங்களில்
வாழ்க்கை முழுவதும் தாங்கி நிற்பேன் !
ஆனால்
உன்னை என்தோளில் சுமந்த ஐந்துநிமிடம்
என் ஐம்புலன்களும் உடைந்து உருகிபோயின !
ஆண்டவன் என்கண்ணை கேட்டு
இருந்தால் கொடுத்து இருப்பேன் -ஏன்
உயிரை பறித்திருந்தால் கூட சந்தோசபட்டிருப்பேன்
ஆண்டவனுக்கு உன் உயிர்தான் வேண்டுமென்று
பறித்துகொண்டான்!
நீ மீண்டும்
மறுஜென்மம் எடுத்தால்
என்நண்பனாகஇருக்கவேண்டும் என்று
உன்னை பறித்துகொண்ட
இரக்கமற்ற ஆண்டவனிடமே
வேண்டிகொள்கிறேன் !
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.