Saturday, 28 July 2012

நகைமுகம்


நகைமுகம் (குறியீடு)


நகைமுகம் அல்லது புன்னகை தவழும் முகம் அல்லது ஸ்மைலி (/) எனப்படுவது, மனித முகத்தின் அழகிய புன்னகையை குறிக்கப் பயன்படுகின்ற உணர்ச்சித்திரம்(emoticon) ஆகும். இது பொதுவாக, மஞ்சள் நிறமுடைய (வேறு பல நிறங்களும் பயன்படுத்தப்படுவதுண்டு) வட்டத்தில் (அல்லது கோளத்தில்) கண்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு கரிய நிற புள்ளிகளும் புன்னகை பூக்கும் வாயை குறிப்பதற்கு வளைந்த வடிவமுடைய கரிய நிற வளைகோடொன்றும் அமைந்த நிலையில் காணப்படும். மேலும், ஸ்மைலி என்ற சொல்லே சிலவேளைகளில், அனைத்துவிதமான உணர்ச்சித்திரங்களையும் (emoticon) குறிக்கப் பயன்படுத்தப்படுவதுண்டு. 

வரலாறு

1953 இல் 'லிலி' திரைப்படத்தின் பிரசாரத்தின் போது முதன் முறையாக பயன்படுத்தப்பட்ட நகைமுகம் (ஸ்மைலி)
1948 இல் வெளியான இங்மார் பேர்க்மேன் என்பவரின் ஹாம்ஸ்டாட் என்ற திரைப்படத்திலேயே முதன் முதலில் மகிழ்ச்சியற்ற முகமொன்று பதிவு செய்யப்பட்டது. பின்னர், 1953 மற்றும் 1958 ஆகிய ஆண்டுகளில், முறையே லிலி' மற்றும் கிகி என்ற நிகழ்படத்தை அறிமுகப்படுத்தும் பிரசார நடவடிக்கைகளின் போது, மகிழ்ச்சியான நகைமுக குறியீடுகள் பயன்படுத்தப்பட்டன.
1958 இல் நியூ யோர்க் நகர வானொலிச் சேவையான WMCA வானொலி நிலையம், ஒலிபரப்பிய கசின் புரூசி (Cousin Brucie) என்ற அன்றைய காலத்தில் பிரபல்யமாயிருந்த வானொலி நிகழ்ச்சியின் போதே, முதன் முதலில் மகிழ்ச்சி நிறைந்த நகைமுக குறியீடு பாவிக்கப்பட்டது. அந்த வானொலி நடத்திய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நகைமுகக் குறியீடு கொண்ட மேலங்கிகள் பரிசாக வழங்கப்பட்டன. 1950களில் ஆயிரக்கணக்கான மேலங்கிகள் இவ்வாறு வெற்றியாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.
1963 ஆம் ஆண்டு, விளம்பர நிறுவனமொன்று அமெரிக்காவின் தொழில்துறை வரைகலைஞரான ஹார்வே போல் என்பவரை, பொத்தான்களில் பயன்படுத்தும் பொருட்டு நகைமுகக் குறியீடுகளை வரைவதற்கான பணியிலமர்த்தியது. இவர், ஒரு மஞ்சள் நிற கோளவடிவமுடைய பகுதியில், முட்டை வடிவான இரு இருண்ட நிறக் கண்களையும், புன்னகையை குறிப்பதாய் அமைந்த வாயையும் கொண்ட நகைமுகமொன்றை வடிவமைத்தார். இதுவே, ஸ்மைலி என்ற நாமத்திற்கு பெயர்போன குறியீடாக உருப்பெற்றது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.