Saturday, 28 July 2012

தாய்வழி


தாய்வழி உறவு முறை



ஆண்-பெண் இருவருக்கிடையிலான திருமண உறவு களும் அதன்பின் அவர்களுக்குள்ளான பாலுறவு களால் உருவாகும் குழந்தை களை ஆண்களின் தந்தை வழியில் கொண்டு வருவதா அல்லது பெண்களின் தாய்வழியில் கொண்டு வருவதா என்பதை அவர்கள் சார்ந்துள்ள சாதிகள் அடிப்படையில் பிரிக்கிறார்கள். குழந்தைகளை பெண்களின் வழியில் கொண்டு வரும் உறவுமுறைக்குத் தாய்வழி உறவு முறை என்று பெயர். இந்தத் தாய்வழி உறவு முறையைக் கொண்டுள்ள சாதிகளில் பிறக்கும் குழந்தைகள் தாய்-->மகள்-->மகளின் மகள்--> என்று தொடர்கிறது. இவ்வழியில் குழந்தையுடன் பிறந்தவர்கள் (சகோதர/சகோதரிகள்)மற்றும் தாயுடன் பிறந்தவர்கள் (மாமா, சித்தி/பெரியம்மா)என்று அனைவரும் ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள்.



தாய்வழி உறவு முறைச் சமூகங்கள்

இன்று தமிழகத்தில் தாய்வழி உறவு முறைச் சமூகங்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. கோட்டைப் பிள்ளைமார்செவளைப் பிள்ளைமார்இல்லத்துப்பிள்ளைமார்நாங்குடி வேளாளர்நாஞ்சில் நாட்டு வேளாளர்,அரும்புக் கட்டி வேளாளர்ஆம்பநேரி மறவர்காரண மறவர்ஆப்பநாடு கொண்டையம் கோட்டை மறவர்கிறித்துவ மறவர்செறுமர்அய்யனவர்செக்கலவர்கயலர்மரைக்காயர் போன்றவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள்.
இலங்கையில் முக்குவர்சோனகர்கிழக்குத் தமிழர்கள் ஆகியோர்களும் தாய்வழி உறவு முறைகளையே கடைப்பிடிக்கின்றனர்.

திருமண உறவுகள்

தாய்வழி உறவு முறைச் சமூகங்களில் திருமணம் நிகழ்வுகளுக்காக குறிப்பிட்ட சமூகங்களின் தாயும், குழந்தைகளும் ஒரே பிரிவினராக இருப்பதால் அந்தப் பிரிவின் மாற்றுப் பிரிவுகளில் உள்ளவர்களுடன் திருமண உறவுகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பிரிவில் தாயுடன் பிறந்த தாய்மாமன் ஒரே பிரிவில் இருப்பதால் இந்தச் சமூகங்களில் பெண்ணிற்குத் தாய்மாமன்களை மணம் முடிக்கும் வழக்கம் இல்லை. தாய்மாமன்கள் சகோதர முறையாகவே கடைப்பிடிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.