Sunday, 22 July 2012

for my (late) friend jessie


என் நண்பிக்கு அஞ்சலி


உன் அகன்ற விழி நீரின் வழி என் கை பிடித்து நீ
பகன்ற மொழிபெயர்துணர முனைகின்றேன்.
என்னை பிரியும் செய்தி சொன்னாயா?
என்னிடமிருந்து விடுபட நினைத்த பொழுது
எனக்குள் நானே வேட்கும் பொழுது
உனக்கும் என் அன்பு கனத்ததா?
கண்ணீர் கழுவி களைந்து விட்டாய்.
வெட்டிஎன் நகத்தை பெட்டிக்குள் பதுக்கிய உன் நிழலை
சட்டத்தில் பிடித்து வைத்தேன் ஜாதி மல்லி பூ சொரிய.
நாம் அப்போது இணைந்தமர்ந்த தனிமைகள் இப்போதோருமைக்கழகி போயின.
தற்போது என் தனிமைகள் அடர்ந்து வெருமைக்கழகி போகுது.
கூட்டத்தில் என்னை கண்டால் கொதித்துருளும் உன் விழிகள்,
என்னை கூடுகையில் நெஞ்சு குளிர் திராட்சையை குணம் மாற கண்டிருக்கேன்.
அந்த சுகம் அப்படியே நிலைக்க நினைக்க, நான் எப்படியோ ஆகிப்போனேன்.
என் கிறுக்கலை கூட கவிதையாய் திரித்தெடுத்து காண்பவருக்கெல்லாம் காட்டி மகிழ்வாய்.
இப்போது என் எழுத்துகள் கூட என்னை ஏளனம் செய்கின்றன,
வார கவிதை பெயரில் எங்களை வதைக்கிறாய் நீயென.
நீ இட்ட சட்டம் 144 தனக்கு தானே இயங்குகிறது.
சிற்றம் கொள்ள யாரும் இல்லை, என்னுடன் சிறிதளவும் யாருமில்லை.
சண்டைக்கும் யாருமில்லை, அதனால் சமாதானத்துக்கு வேலை இல்லை.
எனக்குள் நானே இவை செய்து தோற்ற படியே வெற்றி காண்கிறேன்.
நீ இட்ட முத்தத்தின் எச்சில் என்றும் காயாதிருக்க
ஈர விழி ரேகை ஒன்றை முகத்தினுள் ஓட விட்டேன்.

நீ என்னை நினைப்பாயா? நீயேனும் என்னை நினைப்பாயா?
என்னை நினைக்கும் நேரம் உனக்கு எங்கிருக்கும்?
நொடிக்கு 100 உட்பிரவேசம். யார் வரவை நீ பார்ப்பாய்? என் வரவை எதிர் நோக்கு.
ஆண்டுகள் 2 அனுபவம் பெற்ற நீ
சித்ரகுப்தனின் நாட்குறிப்பில் என் நாள் என்று என்று பார்த்து சொல்லேன்.
பின்னிருந்தால் முன்னேற்ற முயற்சி செய்யேன்.
தனிமை மிகவும் கனக்கிறது.
உன்னருகில் நான் என்னருகில் நீயென,
மீண்டும் ஒரு வசந்த விழா அனுபவிக்க ஆகுமட்டும் முயற்சி செய்யேன்,
அடுத்தடுத்து உறைந்திருப்போம்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.