Saturday, 28 July 2012

அப்பாத்தா


அப்பாத்தா



அப்பாத்தா ( அப்பா + ஆத்தா = அப்பாத்தா ) என்ற தமிழ்ச்சொல் ஆனது மதுரைத் தமிழ் பேச்சு வழக்கில் உள்ள ஒரு சொல் ஆகும் . இச்சொல்லில் பகுதியாக உள்ள அப்பா என்ற வேர்ச்சொல் தந்தையை குறிக்கும் . விகுதியான ஆத்தா என்பது தாயை குறிக்கும் . இச்சொல் தந்தையை ஈன்ற தாய் என்ற உறவு முறையைக் குறிப்பது. கொங்கு தமிழில், மற்றும் ஈழத்தில் இந்த உறவு முறையை அப்பம்மா என்று கூறுவர். சில இடங்களில் "ஐயம்மா" என்றும் அழைப்பர். சிலர் ஆயா என்றும் அழைப்பார்கள் . அம்மாவை ஈன்ற தாயையும் ஆயா என்று அழைப்பதால் , சில நேரங்களில் எந்த தாய் என்ற குழப்பங்கள் ஏற்ப்படும் பச்சத்தில் தமிழர்கள் உடனே அம்மாவை பெற்ற தாயா ? இல்லை அப்பாவை பெற்ற தாயா ? என்று கேள்விகள் கேட்டு குழப்பங்கள் தீர்த்து கொள்வது பெரும்பாலான தமிழர் பேச்சு வழக்கில் ஏற்ப்படும் ஒரு நிகழ்வு ஆகும் .

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.