முடிய வேண்டாம் அந்த நிமிடங்கள்
காலமே உன் கடமையை மறந்து போ
என் காதலன் அருகில் இருக்கையில்.
நேரமே நீ நின்று போ, என் இனியவன் என்னிடம் மனம் விட்டு பேசுகையில்.
அவன் கரம் பிடித்து கண் பார்த்து பேசிகின்ற அந்த அற்புத நிமிடங்கள் நீண்டுக் கொண்டே போகட்டும்.
இயற்கையே நீங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.during my outing wit vijaykarthic 2 vizag
நிழல்
நீ தள்ளி நடந்தாலும்
உன் நிழலுடன் நடப்பதை
உன்னுடன் நடப்பதாய்
எண்ணி கொள்கிறது மனது....
ஒரு பிறவி இன்பம்!
உன்னிடமிருந்து பிரிக்குமென்று தெரிந்திருந்தால்...
விடியலே வேண்டாமென்றிருப்பேன்!
பரவாயில்லை...
உன்னுடன் வாழ்ந்தது கனவாக இருந்தாலும்!எனது ஒரு பிறவியை வாழ்ந்த ஒரு இன்பம்...
என் மனதுக்குல் நிலைதுவிட்டது
பிரிவு
"உன்னை விட்டு பிரியும் போதெல்லாம் நான் தனியாக பேசி கொள்கிறேன் என் நிழலுடன் அல்ல உன் நினைவுகளுடன் " எப்போது நீ வருவாய் என்று
ஒருமுறை என்னைத் தீண்டிவிடு!
என்னைத்
தயவு செய்து
தீண்டிவிடு!
வசந்தம் தீண்டாத மரத்தை
பட்டுவிட்டதென்று
வெட்டி விடுவதுபோல்
நீ
தொட்டுத் தழுவாத
தேகத்தை
பிணமென்று எண்ணிப்
புதைத்துவிடப் போகிறார்கள்.......
காதலனாய் இருந்து பார்!!!
மனிதனாய் இருந்தால்
பூமியில் இருந்து நிலவை ரசிப்பாய்.
காதலனாய் இருந்து பார் -
சராசரங்களில் இருந்து உன்
காதலிக்கு கிரகங்களை பரிசளிப்பாய்.
வெகுநாட்கள் இல்லை!
எழுதுகிறேன் என் எதிர்காலத்தை...
எழுத்தால் அல்ல! எண்ணங்களால்!
எண்ணங்கள் நிறைவேறும்போதுதான்...
என் வாழ்விற்கு ஒரு அற்தம் கிடைக்கும்!
அதற்கு இன்னும் வெகு நாட்கள் இல்லை..
உனக்கும் சேர்த்து நானே காதலிக்கிறேன்
நீ ஒன்றுமே
செய்ய வேண்டாம்
சம்மதம் மட்டும்
சொல்
உனக்கும்
சேர்த்து நானே
காதலிக்கிறேன்….
உணர்ந்தேன்-என் மனமே என்னிடமில்லை!
அமைதியான மனம்
உணர்ச்சிகளால் பாதிக்கப்படுவதில்லை!
அதனை இழந்த என் மனமோ
உணர்ச்சிகளால் பற்றிஎரிகின்றது..
அமைதியைத் தேடி போவேனோ?
அல்லது
உணர்ச்சிகளைத் தோண்டிப் புதைபேனோ?
'உன்னுள் உள்ளது உன் அமைதி" என
பிறர்க்கூற உணர்ந்த நான்
என்னுள் தேட முயன்ற போதே
உணர்ந்தேன்..
என் மனமே என்னிடமில்லை என
"உன்னுள்தான் உள்ளது என் மனம்"
பின் அதன் அமைதிக்கு
நீ என்ன செய்யப்போகிறாய்??
உறக்கம் பிடிக்கும்..
உள்ளே
கனவாக நீ இருந்தால்..!!
உணவு பிடிக்கும்..
நீ
உருட்டி ஊட்டி விட்டால்..!!
மயங்குவது பிடிக்கும்..
மயிலிறகாக
உன் மடி கிடைத்தால்..!!
வர்ணம் பூசுவது பிடிக்கும்..
உன் உதட்டின் மேல்
என் உதட்டால் இடுவதாய் இருந்தால்..!!
மரணம்கூட பிடிக்கும்..
கடைசி மூச்சு
உன் தோளில் சாய்ந்து விடுவதாய் இருந்தால் ....!!
உன் பெயரின் உச்சரிப்பால்......!!
இதயத்தின் ஓசைகள்
இசைத்துக் கொண்டிருப்பது
அன்பே
உன் பெயரை நான்
உரைத்துக் கொண்டிருப்பதனால்
உன் பெயரை நான்
நிறுத்தும் நாள் என்றோ
அன்று என் வாழ்வின்
இறுதி நாளாகும்
அன்பே.....!!
இது தான் உண்மையான காதலா
உன்னை பற்றி நினைக்க மாட்டேன் என்பேன்....
ஆனால், என் மனம் உன்னை நினைக்காமல் இருந்தது இல்லை
உன்னை பார்க்க கூடாது என்று நினைப்பேன்.....
ஆனால், என் கண்கள் உன்னை பார்க்க வேண்டும் என்று துடிக்கும்
இனி உன்னை பேசவோ,பார்க்கவோ மாட்டேன் என்று உரைப்பேன்....
ஆனால், அப்படி உன்னை வெறுத்து பேசும் நேரங்களில்
ஏன் என் கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது என்று தெரியவில்லை....
இதுதான் உண்மையான காதலா....
ஆனால், அந்த காதல் அவனிடம் துளி கூட இல்லை என்னும் போது தான் மனம் வலிக்கிறது......
உன்னால் மட்டுமே முடியும்
உன்னால் மட்டுமே
முடியும்
இதயத்திற்கு
இதமான
அன்பு கொடுத்து
பிரிவு எனும்
இடியும் கொடுக்க…
மரணம்
உன் பிரிவை விட மரணம்
அழகானது தான்
உன் நினைவுகளை விட மரணம்
அழகானது தான்
உன் விழிகளை நான் கானும் நொடிகளை விட மரணம்
அழகானது தான்
நீ என்னை கடந்து சென்ற அந்த நாட்களை விட மரணம்
அழகானது தான்
இதயத்தில் எரியும் கதல் தீயை விட மரணம்
அழகானது தான்
என் மனதில் உறையும் உன்னை விட மரணம்
அழகானது தான்
விதி வரைந்த இந்த நாடகத்தை விட மரணம்
அழகானது தான்
இந்த மொளானத்தை விட மரணம்
அழகானது தான்
கவிதைகள் வரைய விழிமூடும் நொடிகளை விட மரணம்
அழகானது தான்
நீ இன்றி என் நெஞ்சோடு நான் சுமக்கும் வலிகளை விட மரணம்
மிகவும் அழகானது தான்
மரணம் இன்னும் மிக அழகனது தான்..
அதுகும் உன் கைகளால் எனக்கு கிடைக்கும் என்றால்...!
எனது டைரியில்
எனது டைரியில் உன்னை நினைத்து நான் கிறுக்கிய பக்கங்களில் சில வரிகள்..... எனது பெயர் என்ற தலைப்பில் உன்னுடைய உதடுகள் உச்சரிக்கும் வரை நான் உணர்ந்ததில்லை என்னுடைய பெயர் இத்தனை அழகாய் இருக்கிறது என்று!!!......
மறந்து விட்டாயே எப்போதும் போல்..
காதல் எனும் வார்த்தை
எனக்கு கவிதை எழுதிட மட்டும் தான் சாத்தியமானதே..
தோள் சாய்ந்த உன் நேசம்
தொடர்பு எல்லைக்கு வெளியில் போனதே..
புன்னகையால் சிகரம் ஏற்றினாய்...
உன் புன்னகை கண்டதற்கா
என்னை சிதையில் வாட்டினாய்..
கவிதைகள் கேட்டு கண் சிமிட்டினாய்..
கவிதை சொன்னதற்கா
என் காதலை கழுவில் ஏற்றினாய்..
அறுந்து போன பட்டமாய்
மனம் பிடி தேட அலைகிறது
எவரோடும் சிக்க மறுத்து
உன் இதயம் தேடியே பறக்கிறது..
வேறு துணை கண்டு
வாழச் சொல்கிறாய் உன் போல்..
உயிர் உன்னோடு நீ
பறித்து சென்றதை
மறந்து விட்டாயே எப்போதும் போல்..
உனக்கு பிடிக்கும் என்பதால்......
தனிமையில் இருக்கையில்
உன்னுடன் பேச
வார்த்தைகளால் கவி பாடும் நான்
உன் முன்னால் தோன்றையில்
பேச வார்த்தை இன்றி ஊமையாகின்றேன்
என் உதடுகள் பேசும் வார்த்தைகளை விட
என் மௌனம்
உனக்கு பிடிக்கும் என்பதால்
என் கவிதைகள் பேசும் வார்த்தைகளை விட
என் விழிகள் பேசும் கவிதை
உனக்கு பிடிக்கும் என்பதால்
இவன்
எனக்கு
தாயுமானவன் மட்டும் அல்ல
தந்தையுமானவன்
அனைத்துமானவன்
உன் நித்திரை
உன் நித்திரையைக் களவெடுத்து – என்
கண்ணுக்குள் வைத்துக்கொண்டேன்
உன் இதயம் என்னிடத்தில்
நிம்மதியாக உறங்கட்டும் என்று.
வாடிய மலாரனது என் மனம்தான்..............
கனவிலும் உன்னுருவம்
காணத் துடிக்கும்
என்
பார்வையினில் விழுந்து
காதலின் வலைதனில்
சிக்கவைத்து
இன்று
வேதனையில் ஆழ்த்தி
இன்பம் காண்கிறான்
அதிலே புதுமலராய் அவன்......
வாடிய மலாரனது
என் மனம்தான்..............
உனக்கு சளைத்தவள் அல்ல நான்...
நீ மட்டுமல்ல
உன் கைபேசியும்
எப்போதும் சொல்லுகிறது
பிஸி பிஸி என......
நான் மட்டும் என்ன...
உனக்கு சளைத்தவளா??
இப்போதெல்லாம்
நானும் பிஸி தான்
நீ பிஸியா என
அறிந்துகொள்வதில்!!!!
காதல் சொல்ல வந்தேன்
நட்பென்ற போர்வைக்குள் இன்னும் எத்தனை நாள் என் காதலை பூட்டி வைப்பது.
முடிவு செய்தேன் இன்று சொல்லி விடலாம் என்று.
விளைவு, இதோ கடற்கரையில் நீயும் நானும்.
எப்படி சொல்வேன் நண்பனை பார்த்து உன்னிடம் காதல் கொண்டேன் என்று.
அவன் என்ன நினைப்பானோ, என்னை ஏற்பானோ, இல்லையென மறுப்பனோ? என மனதிற்குள் குழம்பித் தவிக்கிறேன்.
உன்னை நேருக்கு நேர் சந்திக்க இயலாமல்
கடல் அலைகளை வெறித்துக் கொண்டிருக்கிறேன்.
மௌனத்தில் கரைந்து போனது நேரங்கள்.
உன் கை கடிகாரத்தை பார்க்கிறாய் என்னையும் பார்க்கிறாய் நேரம் ஆகி விட்டது கிளம்பளாமா என்றது போல்.
கடவுளே அப்படி கேட்டு விட கூடாது என மனதுக்குள் முனுமுனுத்துக் கொண்டிருந்தேன்.
நாட்களை தான் விட்டு விட்டேன்.
இந்த நேரத்தை விட மனம் இல்லை. நான் உன்னைக் காதலிக்கிறேன் உன் மனம் என்ன என்று.
படபடத்த இதயம் இப்போது சராசரி வேகத்தில் துடித்தது.
பாவை என் மனக் குழப்பம், இப்போது சந்தோஷமாய் மாறியது.
என் கேள்விகள் பதில் ஆனது. இதயம் தென்றலை விட லேசாகி போனது.
உன்னை கட்டி அணைத்து காதோரம் கேட்க வந்தேன் ஏனடா இத்தனை நாள் தவிக்க விட்டாய் என்று.
ஏனோ ஆறு மாத பிள்ளை போல வார்த்தை இன்றி தவித்தேன்.
என் அன்னை மடியென, உன் மார்பில் முகம் புதைத்து கண்ணீர் மொழியில் சொல்கிறேன் என் காதலை.
என் வாழ்வின் அர்த்தம் நீ !!
இரண்டு எழுத்து கவிதை நீ!!
என்னை ஆட்கொள்ளும் இன்பம் நீ!!
என் இரவின் கனவுகள் நீ!!
என் இதயத்தை திருடிய கள்வன் நீ!!
என் விரல்கள் மீட்டும் வீணை நீ !!
அது இசைத்திடும் இனிய ராகம் நீ!!
என் பகலின் சூரிய குளுமை நீ!!
என் இரவின் நிலவின் வெப்பம் நீ!!
என்னை இம்சிக்கும் இம்சை நீ!!
என்னை ரசிக்கும் ராட்சசன் நீ !!
என் கவிதையில் பிறக்கும் வர்ணனை நீ!!
என் கோபத்தில் வெளிப்படும் வார்த்தைகள் நீ!!
வெப்பத்தில் இளைப்பாறும் நிழலும் நீ!!
என் மார்கழி மாத போர்வையும் நீ!!
என் விரலின் நகமாய் இருப்பதும் நீ!!
என் உயிரின் உயிராய் இருப்பதும் நீ!!
என் கவிதைகளின் தொடக்கம் என்றும் நீ!!
என் வாழ்வின் அர்த்தம் மொத்தமும் நீ !!
நடைபினமாக்கினாய் என்னை
உன் நினைவுகளைக்கூட்
என்னால் கொல்லை செய்ய முடியவில்லை
நீயோ இல்லை என்ற ஒரு வார்த்தையில்
என்னை நடைபினமாக்கினாய்.
ஊடல்....
முத்தமிட்டு....
மோகம் கொண்டு...
ஆரம்பித்த ஊடல்...
மீண்டும்...
முத்தமிட்டு....
முடித்து வைக்கப்பட்டது...
கூடலின் இறுதியில்.....
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.