Wednesday, 25 July 2012

இந்து சமயம்


இந்து சமயம்


இந்து சமயம் ( Hinduism ) இந்தியாவில் தோன்றிய, காலத்தால் மிகவும் தொன்மையான உலகின் முக்கிய சமயங்களில் ஒன்று. ஏறக்குறைய 850 மில்லியன் இந்துக்களைக் கொண்டு உலகின் மூன்றாவது பெரியசமயமாக இருக்கின்றது [1][2]. பெரும்பாலன இந்துக்கள் இந்தியாவிலேயே வசிக்கின்றார்கள். நேபாளம்இலங்கைஇந்தோனேசியாமலேசியாசிங்கப்பூர்சுரினாம்ஃபிஜி தீவுகள்அமெரிக்காகனடா மற்றும் பிற பல நாடுகளிலும் இந்துக்கள் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் வசிக்கின்றார்கள்.

பிற சமயங்கள் போலன்றி இந்து சமயத்தை தோற்றுவித்தவர் என்று யாருமில்லை. இதனைக் நெறிப்படுத்த அல்லது கட்டுப்படுத்த என ஒரு மைய அமைப்பு இதற்கு இல்லை. பல்வேறு வகையில் பரவலானநம்பிக்கைகள், சடங்குகள், சமய நூல்கள் என்பவற்றைக் உள்வாங்கி உருவான ஒரு சமயமே இந்து சமயம்.
ஆகக் குறைந்தது, கி.மு 1500 ஆண்டுக்கு அணித்தான வேத கால பண்பாட்டில் தோற்றம் பெற்றது.
முக்கியமாக, நம்பிக்கை, அன்பு, உறுதி என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட எல்லாவிதமான சமயச் செயற்பாடுகளும், இறுதியாக ஒரே தன்னுணர்வு நிலைக்கே இட்டுச் செல்கின்றன. அதனால்தான் இந்து சமயச் சிந்தனைகள் பல்வேறுபட்ட நம்பிக்கைகள் தொடர்பில் சகிப்புத் தன்மையைக் கடைப்பிடிப்பதை ஊக்குவிக்கின்றன.
ஒரு இந்துவுக்கு, 'நிலையான தர்மம்' என்பதை வரையறுப்பதில், இந்த எண்ணமே உந்து சக்தியாக உள்ளது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.