Thursday, 12 July 2012

சாக்கிரட்டீசு


சாக்கிரட்டீசு


சாக்கிரட்டீசு (கிமு 470 - கிமு 399ஏதென்சைச் சேர்ந்த ஒரு மெய்யியலாளர் (தத்துவஞானி) ஆவார். இவர் மேற்கத்திய தத்துவ மரபின் முக்கியமான சின்னமாகத் திகழ்பவர்களுள் ஒருவர். இவருடைய சீடர் பிளேட்டோவும் புகழ்பெற்ற தத்துவஞானி ஆவார். 

சாக்கிரட்டீசின் முறை

சாக்ரட்டீசிய முறை அல்லது எலன்க்கோசு (elenchos) முறை என அறியப்படுகின்ற இவருடைய மெய்யியல் ஆராய்வு முறையே, மேற்கத்திய சிந்தனைகளுக்கு இவரது முக்கியமான பங்களிப்பாகும். இந்த முறையை அவர் பெரும்பாலும் முக்கியமான நல்லொழுக்க எண்ணக்கருக்களை மெய்த்தேர்வு செய்வதில் (பரிசோதிப்பதில்) பயன்படுத்தினார். இதற்காக, சாக்கிரட்டீசு, அறநூல் அல்லது நல்லொழுக்கத் தத்துவத்தினதும் அதனால் பொதுப்படையான தத்துவஞானத்தினதும் தந்தையும், ஊற்றுக்கண்ணுமாகக் கருதப்பட்டுவருகிறார்.அவர் இறந்த பிறகு நாமெல்லாம் சொல்வதுமாதிரி, ‘அவர் இறந்துவிட்டார்’ என்றோ,’பரலோக ப்ராப்தி அடைந்தார்’ என்றோ, இறைவனடி சேர்ந்தார்’ என்றோ சொல்லாமல், அவரது மரணத்தை ‘சாக்ரடீஸ் இன்றுமுதல் சிந்திப்பதை நிறுத்திவிட்டார்’ என்று அவரது சீடர்கள் அறிவித்தனர்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.