Saturday, 28 July 2012

பதினாறு பேறு


பதினாறு பேறு


தமிழர்களின் சைவத் திருமணச் சடங்குகளில் "ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம் முழுமையாய்ச் சூழப் பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க” என வாழ்த்தப்படுகின்றது. இங்கு குறிப்பிடப்படும் பதினாறு பெரும் பேறுகளாவன:
  1. கலையாத கல்வி
  2. கபடற்ற நட்பு
  3. குறையாத வயது
  4. குன்றாத வளமை
  5. போகாத இளமை
  6. பரவசமான பக்தி
  7. பிணியற்ற உடல்
  8. சலியாத மனம்
  9. அன்பான துணை
  10. தவறாத சந்தானம்
  11. தாழாத கீர்த்தி
  12. மாறாத வார்த்தை
  13. தடையற்ற கொடை
  14. தொலையாத நிதி
  15. கோணாத செயல்
  16. துன்பமில்லா வாழ்வு

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.