Saturday, 21 July 2012

அழகி


அழகி


பதினெட்டு வயது 

அழகி

பழத்தோல் வழுக்கி
விழப்போனாள்...
பதை பதைத்தது நெஞ்சு
திக்கென்றது மனது
உதவிக்கரம் தானாய் உயர்ந்தது
எனக்கு மட்டுமா?
இல்லை...இல்லை...
பஸ் நிலையத்தில்
அத்தனை பேருக்கும்...!
'அம்மா...தர்மம்...தாயே...'
அழுக்கு உடையில்
அறுபது வயது மூதாட்டியின்
ஆதரவற்ற சோகக் குரல்
அனாதையாய் காற்றில்
அதே பஸ் நிலையத்தில்..!

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.