Sunday, 29 July 2012

அவளின் பிரிவு(jessie)


அவளின் பிரிவு. 

கனவுகளில்..... 
*அவள் சேலை முந்தானை, 
ஏன் உடலில் படும்படி , 
உறக்கம். 

*அவளின் இரவுநேர 
அரைத்துக்கம்... 
தலையணைக்குப் பதிலாய் 
தேடுகிறாள், 
என் கைகளை. 

கற்பனையில் ..... 
*சோகத்தில் அவள் , 
தோள் சாய்வதாயும் ... 

*அழுகையில் என் , 
கண்ணீர் துடைக்கும் , 
சேலையாயும் , 
என், 
தலையணைதானிப்போது. 

நினைவில் ..... 
*என் தோள்முனையில் , 
அவள் கன்னம் பதிய , 
பேருந்துப்பயணம். 

*மாலைநேர மழைதுரலில் , 
இருவரின் கைகோர்த்த, 
வெகுநேர நடைபயணம் . 

அவள் என்னை , 
விடுத்துச் சென்றாலும் கூட, 
கனவுகளில்.... 
கற்பனையில் ..... 
நினைவில் ..... 
அவளோடு வாழ்வதுபோல் , 
நாட்கள் நகர்ந்துகொண்டிருகிறது , 
அமைதியாய்......


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.