தமிழ்ப் பருவப்பெயர்கள்
ஆண்களின் பருவப்பெயர்கள்
- பாலன் -7 வயதிற்குக்கீழ்
- மீளி -10 வயதிற்குக்கீழ்
- மறவோன் -14 வயதிற்குக்கீழ்
- திறலோன் -14 வயதிற்கும்மேல்
- காளை -18 வயதிற்குக்கீழ்
- விடலை -30 வயதிற்குக்கீழ்
- முதுமகன் -30 வயதிற்கும்மேல்
மற்றொரு பட்டியல்
- பிள்ளை -குழந்தைப்பருவம்
- சிறுவன் -பாலப்பருவம்
- பையன் -பள்ளிப்பருவம்
- காளை -காதற்பருவம்
- தலைவன் -குடும்பப்பருவம்
- முதியோன் -தளர்ச்சிப்பருவம்
- கிழவன் -மூப்புப்பருவம்
பெண்களின் பருவப்பெயர்கள்
- பேதை - 5 வயதிற்குக்கீழ்
- பெதும்பை -10வயதிற்குக்கீழ்
- மங்கை -16வயதிற்குக்கீழ்
- மடந்தை -25வயதிற்குக்கீழ்
- அரிவை -30வயதிற்குக்கீழ்
- தெரிவை -35வயதிற்குக்கீழ்
- பேரிளம்பெண் -55வயதிற்குக்கீழ்
மகளிரின் 7 பருவம் எப்படிப்பட்டது என்னும் விளக்கம் சிறப்பாக உள்ளது.
- பேதை 7 அகவை வரை – வாரி போன்றவள்
- பெதும்பை 11 அகவை வரை – மணி போன்றவள்
- மங்கை 19 அகவை வரை – வெய்யோன் போன்றவள்
- மடந்தை 25 அகவை வரை – மதி போன்றவள்
- அரிவை 30 அகவை வரை – பா(கு) போன்றவள்
- தெரிவை 40 அகவை வரை – தேர் போன்றவள்
- பேரிளம்பெண் அகவைக்கு மேல் – வள்ளல் போன்றவள்
பூவின் பருவங்கள்
- அரும்பு - அரும்பும்நிலை
- மொட்டு -மொக்குவிடும்நிலை
- முகை -முகிழ்க்கும் நிலை
- மலர் -பூநிலை
- அலர் -மலர்ந்தமநிலை
- வீ -வாடும்நிலை
- செம்மல் -இறுதிநிலை
இலைகளின் பருவப்பெயர்கள்
- கொழுந்து -குழந்தைப்பருவம்
- தளிர் -இளமைப்பருவம்
- இலை -காதற்பருவம்
- பழுப்பு -முதுமைப்பருவம்
- சருகு -இறுதிப்பருவம்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.