என் தோழியே வந்து விடு.
என் தோழியே
துன்பம் என்பது
என்னிடம் இருந்தது இல்லை,
நீ இருக்கும் வரை.
சோகம் என்பது
எனக்கு வந்தது இல்லை,
நீ இருக்கும் வரை.
கண்ணீர் என்பது
என் கண்ணில் இருக்கும் என்று தெரிந்தது இல்லை,
நீ இருக்கும் வரை.
வேதனை என்பது
என் இதயத்திற்கு வலி என்று தெரிய வில்லை,
நீ இருக்கும் வரை.
கஷ்டம் என்பது
நான் பட்டது இல்லை,
நீ இருக்கும் வரை.
என் தோழியே
நீ எங்கே சென்றாய்.
நீ சென்றப்பின்
நான் அனைத்து துன்பங்களை
அனுப்பவிந்து விட்டேன்.
என்னை சிரிக்க வைத்து
என்னிடம் எந்த துன்பங்களும் வராமல்
என்னை நீ பார்த்து கொண்டாய்.
இன்று
சிரிப்பு என்பதே மறந்து விட்டேன்.
நீ மறுப்படி வருவாயா
என்னை இந்த துன்பத்தில் இருந்து
விடுதலை வாங்கி தருவாயா தோழி.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.