இந்திய ரூபாய்க் குறியீடு
இந்திய ரூபாய்க் குறியீடு (
) என்பது இந்தியாவின் அதிகாரப்பூர்வ நாணயமான இந்திய ரூபாயின் பணக் குறியீடு ஆகும். இந்தக் குறியீடு இந்திய மக்களிடையே நடத்தப்பட்ட ஒரு திறந்த போட்டியின் மூலம் தேர்வு செய்யப்பட்டது. இந்த வடிவமைப்பு இந்திய அரசுக்கு 15 சூலை, 2010 அன்று அளிக்கப்பட்டது.[1] இந்திய ரூபாய்க் குறியீடு தேவநாகரி எழுத்தான "र" (ர) என்பதையும்இலத்தீன் எழுத்தான "R" என்பதையும் இணைத்து உருவாக்கப்பட்டதாகும். ஒருங்குறி எழுத்துருத் தொகுதியில் U+20B9 என்ற இடத்தில் இக்குறியீடு வைக்கப்பட்டுள்ளது.
தோற்றம்
மார்ச்சு 5, 2009 அன்று இந்திய அரசு இந்திய ரூபாய்க்கு ஒரு குறியீடு உருவாக்கும் போட்டியை அறிவித்தது.[2][3] 2010ஆம் ஆண்டு இந்திய வரவுசெலவுத் திட்டக் கணக்கின்போது நிதியமைச்சர்பிரணாப் முகர்ஜி இந்திய ரூபாய்க்குக் குறியீடு என்பதை முன்மொழிந்தார். அக்குறியீடு இந்தியாவின் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் பறைசாற்றுவதாகவும் இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.[4] நந்திதா கொர்ரீய-மெக்ரோத்ரா, இத்தேஷ் பத்மசாலி, சிபின் கேகே, சாருக் ஜே இரானி, டி உதயகுமார் ஆகிய ஐந்து பேரது குறியீடுகள் அமைச்சரவைப் பரிந்துரைக்கு அனுப்பட்டன.[5][6][6] இந்தப் போட்டியில் மொத்தம் 3331 குறியீடுகள் பெறப்பட்டன. இதிலிருந்து இவர்கள் ஐந்து பேரது குறியீடுகள் மட்டும் இறுதிச் சுற்றுக்கு சூன் 24, 2010 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டன.[7] இறுதியாக சூலை 15, 2010 அன்று அமைச்சரவைக் கூட்டத்தில்[1] உதயகுமார் உருவாக்கிய குறியீடு இறுதிப்படுத்தப்பட்டது.[1][8] உதயகுமார் திமுக தலைவர் ஒருவரது மகனாவார்.[9] இவர் குவகாத்தியிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் துணைப்பேராசிரியராகப் பணிபுரிகிறார்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.