Saturday, 28 July 2012

மூலிகைகள் பட்டியல்


மூலிகைகள் பட்டியல்



உலகின் பல்வேறு பாகங்களிலும் காணப்படும் மூலிகைகளினை இப்பட்டியல் தொகுக்க முனைகின்றது.
மூலிகைஅறிவியற் பெயர்மருத்துவ குணங்கள், பயன்பாடு
முட்சங்கன்Azima Tetracanthaதேள்கடி, பூச்சிக்கடி விஷம் குறைய
சடாமாஞ்சில்Nardostachys Jatamansiகூந்தல் தைலத்திற்கு.
ஓதியன்Lannea coromandelicaவாய்புண், குடல்புண், இரத்தக்கழிச்சல், பேதி
நஞ்சறுப்பான்Tylophora Asthmaticaஆஸ்துமா
நுணாMorinda Coreiaமாந்தம், கழிச்சல்
தழுதாழைClerodendrum phlomidesமூட்டுவலி, இளம்பிள்ளை வாதம்
ஆரை மூலிகைMarselia quadrifidaசிறுநீர்க்கட்டு, சிறுநீர் எரிச்சல்.
சிற்றாமுட்டிPavonia zeylanicaமூட்டு வலி, வாதம் ஆகியவைகளுக்கு மேல் பூச்சு
காசுக்கட்டிAcacia catechuவயிற்றுப் போக்கு, மலத்தில் இரத்தம்.
பற்பாடகம்Mollugo cervianaகுழந்தைகளுக்கு பேதி, ஜுரம் கட்டுப்படுத்த
சதகுப்பைAnethum sowaகுழந்தைகளுக்கு பால் செரியாமை, வயிற்று உப்புசம்.
நிலாவிரைCassia Sennaமலச்சிக்கல்.
அரிவாள்மனைப் பூண்டுSida acutaகாயங்கள், புண்களுக்கு களிம்பு செய்து பூச
தேற்றான்கொட்டைStrychnos potatorumமூலம், சிறுநீர்க்கட்டு, வெள்ளைப்படுதல்
திப்பிலிPiper longumதொண்டைக்கட்டு, காய்ச்சல், கோழை, சளி
அசோகுSaraca indicaகருப்பை நோய்கள், சூதக வலி, மாதவிடாய் போக்கு, வெள்ளைப்படுதல்.
துத்திAbutilon indicumமூலம், வெள்ளைப்படுதல்.
தண்ணீர்விட்டான் கிழங்குAsparagus racemosusஉடல் பருக்க, வயிற்று எரிச்சல், நீர்க்கட்டு, தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க.
சிறுசெருப்படைColdenia procumbensநீர்க்கடுப்பு, சிறுநீர் எரிச்சல், வெள்ளைப்படுதல்
தாழைPandanus odoratissimusவெட்டை நோய், உடல் எரிச்சல்.
ஓரிதழ் தாமரைHybanthus Enneaspermusசிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், வெள்ளைப்படுதல்
இம்பூரல்Oldenlandia umbellataஇரத்த வாந்தி, மாதவிடாய் போக்கு
வெட்டுக்காய் பூண்டுTridax procumbensபுண்கள், வெட்டுக் காயத்தின் மீது வைத்துக் கட்ட, வெட்டுக் காயத்தில் ரத்தம் வெளியேறுவது நிற்க
வசம்புAcorus calamusகுழந்தைகளுக்கு நாக்குத் தடுமாற்றம், வாந்தி, பேதி, வயிற்றுவலி
உத்தாமணி (வேலிப்பருத்தி)Pergularia daemiaகுழந்தைகளுக்கு செரியாமை, மாந்தம், வயிற்றுப் பொருமல் ஆகியவைகளுக்கு
அதிமதுரம்Glycyrhiza glabraஇருமல், வயிற்றுப்புண், பசியின்மை, சுவையின்மை, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்
பேய்மிரட்டிANISOMELES MALABARICAபசி மிகுத்தல், குடல் வாயுவகற்றல்,வியர்வை பெருக்குதல்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.