Saturday, 28 July 2012

ஃபேஸ்புக்


ஃபேஸ்புக் (Facebook2004இல் தொடங்கிய இணையவழி சமூக வலையமைப்பு நிறுவனமாகும். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவர் மார்க் சக்கர்பர்க்ஹார்வர்ட் மாணவர்களுக்கு ஆரம்பித்து பின்பு வேறு ஐவி லீக் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் அனுமதி கிடைத்தது. இன்றைய ஃபேஸ்புக்கில் 13 வயதான நபர்கள் சேரலாம். அலெக்சா நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி இணைய முழுவதிலும் ஃபேஸ்புக் தான் இரண்டாவது மிகப் பரவலமான இணையத்தளமாகும்.



முகநூல்

பேஸ்புக் அல்லது முகநூல் என்பது 2004ல் தொடங்கப்பட்ட இணையவழி சமூக வலையமைப்பு. ஜுலை 2011 கணக்கெடுப்பின்படி இதில் 800 மில்லியன் உ'பயோகிப்பாளர்கள் உள்ளனர். 13 வயதிற்கு மேற்பட்டவர்கள் முகநூலில் தங்களின் பெயரைப் பதிவு செய்து கொண்டு முகநூலில் உள்ள மற்றவர்களை நண்பர்களாக்கிக் கொண்டு தங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொள்வர்.

வரலாறு


முகநூலை மார்க் சக்கர்பர்க் தன் நண்பர்களான எடுடாரோ சாவ்ரின், டஸ்டின் மாஸ்கோவிட் போன்ற ஹார்வர்ட் நண்பர்களுடன் தொடங்கினார். பிறகு ஐவி லீக்,ஸ்டான்போர்டு பல்கலைக்கழக மாணவர்களும் முகநூலில் சேர்ந்தனர். பின்னர் ஆப்பிள்மைக்ரோசாஃப்ட் நிறுவன ஊழியர்களும் முகநூலில் சேர்ந்தனர். 2008ல்,முகநூலின் தலைமையகம் அயர்லாந்து நாட்டின் டப்ளின் நகரில் தொடங்கப் பட்டது. 2010ல், முகநூலின் மதிப்பு 41 மில்லியன் டாலராக உயர்ந்து, கூகிள்,அமேசானைத் தொடர்ந்து அமெரிக்காவின் மூன்றாவது பெரிய இணைய தள நிறுவனமாக உயர்ந்தது. 2011ல் முகநூலின் தலைமையகம் மென்லோ பார்க், கலிபோர்னியாவிற்கு மாற்றப்பட்டது. 13 வயதிற்கு மேற்பட்ட, சரியான மின்னஞ்சல் முகவரி உள்ள யாரும் முகநூலில் அங்கத்தினர் ஆகலாம்.

வரவேற்பு

இந்த இணையதளம் 'உலகின் சிறந்த 100 இணையதளங்களுள்' ஒன்று என்ற விருதை பி.சி. நாளிதழ் மூலம் 2007ல் வென்றது. 2008ல் 'மக்கள் குரல் விருது' கிடைத்துள்ளது. நியூஜெர்சி மாணவர்களின் கருத்துப்படி இளங்கலை மாணவர்கள் விரும்பும் இணையதளங்களுள் முகநூல் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. 2010ல் சிலிக்கன் பள்ளத்தாக்கில் உள்ள நிறுவனங்களில் சிறந்த படைப்புக்கான விருதைப் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவின் உச்ச நீதிமன்றம் அனுப்பும் நீதிமன்ற சம்மன் அனுப்பக்கூடிய சிறந்த வழியாக முகநூலைத் தேர்ந்தெடுத்துள்ளது.

உபயோகிக்கும் முதல் 10 நாடுகள்

ஆங்கில மொழி பேசும் கனடா,அமெரிக்கா ஐக்கிய ராஜ்ஜியம் ஆகிய நாடுகளிலும், வட அமெரிக்கா,மத்திய கிழக்கு நாடுகளிலும், ஐரோப்பா, ஆசிய பசிபிக் நாடுகளிலும் முகநூல் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அமெரிக்கா,இந்தோனேசியா, இந்தியா, ஐக்கிய ராஜ்ஜியம், துருக்கி,பிரேசில்,மெக்ஸிகோ, பிலிப்பைன்ஸ்,பிரான்ஸ்,ஜெர்மனி போன்ற நாடுகள் முகநூல் பயன்பாட்டில் முதல் 10 இடங்களைப் பெறுகின்றன.

சமூகத்தில் முகநூலின் தாக்கம்

  • வியாபாரிகளும், நிறுவனங்களும் தங்களுடைய பொருள்களை மக்களிடம் அறிமுகப்படுத்தும் வழியாக முகநூலைக் கருதுகின்றனர்.
  • ஒரே எண்ணம்,விருப்பம் உடையவர்களை ஒன்றிணைக்கும் தளமாக உள்ளது.
  • பிரிந்து போன குடும்பங்கள் இந்த முகநூல் மூலம் ஒன்று சேர்ந்த நிகழ்வுகளும் உண்டு.
  • சிலர் நண்பர்கள், உறவினர்களிடம் தொடர்பு கொள்ளும் தளமாகக் கருதினாலும், வேறு சிலர் நேரடித் தொடர்பு இல்லாததால் முகநூல் மூலம்
  • சமூகக் குற்றங்கள் நடக்க வாய்ப்பு இருப்பதாகக் கருதுகின்றனர்.
  • விவாகரத்து, குழந்தைப் பேறு இல்லாமை போன்றவற்றிற்கும் இந்த இணையதளம் காரணமாக இருக்கிறது என்று கருதுவோர் சிலரும், இதை மறுப்பவர் சிலரும் உண்டு.
  • 'த சோசியல் நெட்வொர்க்' என்ற பெயரில் முகநூலைப் பற்றிய திரைப்படம் ஒன்றும் வெளி வந்துள்ளது.

விமர்சனம்

சீனா,வியட்நாம், ஈரான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான்,சிரியா,பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இந்த இணையதளம் இஸ்லாமியத்துக்கு எதிரானது, மத வேற்றுமையை ஏற்படுத்தக்கூடியது என்று தடை செய்துள்ளனர். 50% பிரிட்டிஷ் கம்பெனிகளில் வேலை நேரத்தில் முகநூல் இணையதளம் பார்ப்பதற்கு தடை விதித்துள்ளனர். அழையா விருந்தாளிகளால் சில அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டதால் ஜெர்மனியில் முகநூலைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

அரசியலில் தாக்கம்

  • ஜனவரி 2008 அமெரிக்க அரசியலில் குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சியின் 'நேருக்கு நேர்' கருத்தரங்கை நடத்தியதால் அமெரிக்கத் தேர்தலில் பெரிய மாற்றம் உண்டாக முகநூல் காரணமானது.
  • பிப்ரவரி 2008ல் ' ஒரு மில்லியன் குரல்கள் FARC க்கு எதிராக' என்று ஆயிரக்கணக்கான கொலம்பிய மக்களை கொலம்பிய ஆயுதப்புரட்சிப் படைக்கு எதிராக ஒன்று திரட்டியதிலும் முக்கியப் பங்கு வகித்தது.
  • 2011 எகிப்திய புரட்சியில் இந்த இணையதளம் முக்கியப் பங்கு வகித்ததால், ஒரு எகிப்தியக் தம்பதியர் தம் குழந்தைக்கு பேஸ்புக் என்று பெயரிட்டுள்ளனர்.


Facebook, Inc.
ஃபேஸ்புக்
வகைதனியார்
நிறுவியதுகேம்பிரிஜ்,மாசசூசெட்ஸ்
(பெப்ரவரி 4, 2004)[1]
தலைமையகம்பாலோ ஆல்ட்டோ,கலிபோர்னியா
முக்கிய நபர்கள்மார்க் சக்கர்பர்க், நிறுவனர், அதிபர்
டஸ்டின் மாஸ்கோவிட்ஸ், துணை நிறுவனர்
செரில் சான்ட்பர்க், மூத்த நிர்வாக அதிபர்
வருமானம் 300 மில்லியன்அமெரிக்க டாலர்(2008 மதிப்பு)[2]
நிகர வருமானம்Red Arrow Down.svg -50 மில்லியன்அமெரிக்க டாலர்(2008 மதிப்பு)[2]
தொழில் புரிவோர்500 (March 2008)[3]
இணையத்தளம்facebook.com
இணையத்தள வகைசமூக வலையமைப்பு
விளம்பரம்Banner ads
பதிவுவேண்டியுள்ளது
தொடக்கம்பிப்ரவரி 2004
தற்போதைய நிலைActive



No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.