தாவணி
தாவணி என்பது இளம் பெண்கள் அணியும் மேல் ஆடை. சுமார் இரண்டு மீட்டர் நீளமும் சுமார் ஒரு மீட்டர் அகலமும் கொண்ட துண்டுத் துணியாகும். பருவம் எய்திய பெண்கள் தங்கள் மார்பு , வயிறு , மற்றும் முதுகுப் பகுதியை மறைப்பதற்காகப் பயன்படுத்தும் துணி ஆகும். இது இடது தோள் பகுதியை மறைக்கும் ஆடை ஆகும். பாவாடை , மேல்சட்டை ஆகிய ஆடைகளுக்கு மேலாக இவ்வாடை அணியப்படுகிறது. விளிம்புகள் (ஓரங்கள் ) தைக்கப்பட்டோ அல்லது தைக்கப்படாமலோ இவ்வாடை அணியப்படுகிறது. பெண்கள் அணியும் புடவையின் முந்தானைப் பகுதியைப் போன்றது. இது பெண் குழந்தைகள் பருவம் எய்திய பிறகு திருமணத்திற்கு முன்பு இடைப்பட்ட காலத்தில் அணியும் ஆடை.
தாவணி அணியும் பழக்கம் தமிழகத்தில் இருக்கிறது. இப்பழக்கம் எந்த நூற்றாண்டில் இருந்து பின்பற்றப்படுகிறது என்பதை அறுதியிட்டுக்கூற இயலவில்லை. ஆனாலும் கடந்த மூன்று நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருப்பதை செவி வழிச் செய்திகளால் அறிய முடிகிறது. தாவணிகள் பல்வேறு வண்ணங்களிலும் பூ உள்ளிட்ட பல ஓவியங்களையும் தாங்கி அழகாக வடிவமைக்கப்படுகின்றன.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.