Sunday, 29 July 2012


தோழியே வருவாயா ????? 

சிறு தவறுகள் நான் 
செய்யும் போது..... 

சிறுவனாய் எனை பாவித்து 
செல்லமாய் காதை திருகிடுவாயே ..... 

சிறுகாயம் நான் அடைந்தாலும் 
அதை சிலுவையாய் உன் 
நெஞ்சில் சுமந்தாயே ..... 

உண்ண நான் மறுத்த நாட்களில் எல்லாம் 
உடன் நீ இல்லை என்றாலும் ...... 

உடனுக்குடன் குறுஞ்செய்தி அனுப்பி 
கைப்பேசி முழுதும் பாசமாய் நிறைந்தாயே ....... 

கவிதைப் புத்தகம் நான் போட 
கை வளையல்கள் தந்தாயே ..... 

என் கவலைகள் தீர்ந்திட 
கடவுளிடம் நாளும் சென்றாயே ....... 

அந்த மாதுவை நான் மறக்க இயலாது 
மதுவில் மணிக்கணக்கில் திளைத்தபோது, 

நிமிடக் கணக்கில் எனக்காய் அழுதாயே ..... 
நித்தமும் என்னிடம் மது அருந்தாதே என்று 
இரு"கை" கூப்பி தொழுவாயே ....... 

உன் ஒவ்வொருகுறுஞ்செய்திக்கும் 
பதில் நான் அனுப்பவில்லை என்றால், 

கோபமாய் அலைப்பேசியில் அழைத்து 
வசைப்பாயே ...... 

குடித்துவிட்டு நான் 
எங்கே கிடந்தாலும் .... 

உன் ஸ்கூட்டி இல் 
என் வீட்டில் கொண்டு 
சேர்ப்பாயே... 

தேர்வுக்கு வராது 
வீட்டில் நான் துங்கிட்ட 
நாட்களெல்லாம்....... 

என் வீடு தேடி வந்து 
உதைப்பாயே ... 

படி ....படி ...என்று 
நாளும் என்னை வதைப்பாயே ... 

நம் நட்பின் ஆழத்தை கோபமாய் 
என்னில் விதைப்பாயே ..... 

முகச்சவரம் நான் 
செய்யவில்லை என்றால் கூட 
முகத்தை தூக்கிவைத்துக் கொள்வாயே ..... 

தினமும் பிள்ளையாரிடம் கூட்டிச்சென்று 
முப்பது தோப்புகரணம் போடச்சொல்லியே 
கொல்வாயே......... 

தோழியே எனக்காய் வாழ்ந்தாயே ......... 
இன்று ஏன் எனை விடுத்துச் சென்றாயே ....... 

என் இரவு நாட்களில் எல்லாம் 
நகராத நிலவாய் நின்றாய் ....... 

என் இருண்ட வாழ்க்கை முழுதும் 
அணையாத விளக்காய் வந்தாய் ........ 

காரணங்கள் ஏதுமின்றி 
என்னை தனித்துச் சென்றாய் ....... 

கல்யாணம் உனக்கு ஆன நாட்களிலிருந்து 
கடவுள் போல் பேசாது எங்கோ சென்றாய் ........ 

அருகில் இல்லை என்பதால் 
நிலவினை நாம் வெறுப்பதில்லை ! 

நீ என்னை அழைக்கவில்லை என்பதால் 
உன்னை நினைக்க நான் மறப்பதில்லை ! 

காத்துக் கொண்டிருக்கிறேன் தோழியே ........ 

முதியோர் இல்லத்தில் இருக்கும் அன்னை 
தன பிள்ளையின் வரவை எதிர்நோக்கி 
காத்துக் கொண்டிருப்பது போல் .......

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.