நெல்சன் மண்டேலா Nelson Mandela | |
2008 இல் மண்டேலா | |
தென்னாப்பிரிக்காவின் அரசுத் தலைவர்
| |
பதவியில் 10 மே 1994 – 14 ஜூன் 1999 | |
முன்னவர் | பிரெடெரிக் வில்லியம் டி கிளார்க் |
---|---|
பின்வந்தவர் | தாபோ உம்பெக்கி |
பதவியில் 3 செப்டம்பர் 1998 – 14 ஜூன் 1999 | |
முன்னவர் | அண்டிரெஸ் பாஸ்திரானா அராங்கோ |
பின்வந்தவர் | தாபோ உம்பெக்கி |
அரசியல் கட்சி | ஆப்பிரிக்கத் தேசியக் காங்கிரஸ் |
பிறப்பு | 18 சூலை 1918 முவெசோ,தென்னாப்பிரிக்கா |
வாழ்க்கைத் துணை | எவெலின் மாசே (1944–1957) வின்னி மண்டேலா(1957–1996) கிராசா மாச்செல் (1998–இன்று) |
இருப்பிடம் | ஹூஸ்டன் எஸ்டேட்,தென்னாப்பிரிக்கா |
சமயம் | மெதடிசம் |
கையொப்பம் | |
இணையதளம் |
நெல்சன் மண்டேலா (Nelson Rolihlahla Mandela, பிறப்பு: ஜூலை 18, 1918), தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர்ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார். தொடக்கத்தில் அறப்போர் (வன்முறையற்ற) வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் இராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கினார். இவர்கள் மரபுசாரா கெரில்லாப் போர்முறைத் தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தினர். மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது. சிறையின் பெரும்பாலான காலத்தை இவர் ராபன் தீவில் சிறிய சிறை அறையில் கழித்தார். 1990 இல் அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்கக் குடியரசு மலர்ந்தது. மண்டேலா, உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்குகிறார்.
தொண்ணூற்று நான்கு வயதான மண்டேலா, இனவெறி ஆட்சியில் ஊறிக்கிடந்த தென்னாபிரிக்காவை மக்களாட்சியின் மிளிர்வுக்கு இட்டுச் சென்றவர். அமைதிவழிப் போராளியாக, ஆயுதப் போராட்டத் தலைவனாக, தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளியாக, 27 ஆண்டுகள் சிறையில் வாடி பின்னர் விடுதலையாகி குடியரசு தலைவராக, அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவராக இவரின் அரசியல் பயணம் தொடர்ந்தது. சூன் 2008ல் பொது வாழ்க்கையிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.