Sunday, 29 July 2012

கோபிநாத் !


கோபிநாத் ! 

காயங்கள் கண்டபோதிலும் 
கனவுகளை நோக்கி ஓடியவன் 
ஆடைகள் விற்றபோதும் ஆசைகளை விட்டுகொடுக்காதவர் 
தன்னம்பிக்கையால் தடைகளை கடந்தார் 
உன்எண்ணங்கள் உனக்கு வலிமை 
பேச்சே உந்தன் திறமை ! 

சிந்தனையால் சிலிர்க்க வைத்தார் 
அவர் பேச்சால் மெய்மறக்க வைத்தார் 
நீ பேசுவதால் 
சமுதாயத்தில் அவிழாத முடிச்சுகளும் 
அவிழும் ! 

நீயா நானா என பேசுவதிலும் 
நியாயங்களை நிலைநாட்டுவதிலும் 
வல்லமை படைத்தவன் ! 

உன்பேச்சில் விழித்தவர்களும் உண்டு 
மயங்கியவர்களும் உண்டு ! 


நீ சாதிக்க பிறந்தவன் 
எதையும் விவாதிக்க சிறந்தவன் 
உண்மையை உரைப்பதில் வல்லவன் ! 

நீ விரும்பிய மேலாண்மையை விட 
சிறந்தது உனது புத்திகூர்மை... 

அன்று சென்னையில் 
உன் படிப்புசான்றிதழை அடகுவைத்தாய் 
இன்று 
உன்பேச்சில் உலகமே 
அடங்கிப்போனது !


கள்ளமில்லா உன் முகத்தை 
கட்டிலிலே கண்டவேளை 
கலங்கி நின்றே எண்ணிக்கொண்டேன் 
கயவன் அந்த கடவுள் என்று... 
நீ ஒருமுறை மரணித்தாய் - இனி 
உன் நினைவுகள் வரும் நேரங்களில் - நான் 
ஒவ்வொரு முறையும் மரணிப்பேனே.. 
நீ என்னைவிட்டு செல்லவில்லை 
என் நினைவுகளில் தங்கிவிட்டாய் . 
உன் ஆன்மா சாந்திகொள்ள 
தமிழன்னை அவள் தயை புரிவாள் .......... 


(என் நட்பை உதறிவிட்டு இன்று காலனிடம் நட்பு கொண்ட என் jessie க்கு இந்த 
கவிதையால் அஞ்சலி செலுத்துகிறேன் ....) 

jessie's kavithai for me


நான் உன்னை காதலிக்கிறேன் என்று..... 


பலமுறை சொல்லிவிட்டேன். 

ஒரு முறையாவது 

உன் உதட்டால் 

சொல்ல முடியாவிட்டாலும் 

கண்களிலாவது சொல் 

நான் உன்னை காதலிக்கிறேன் என்று..... 



காதல் 

தெளிந்து போன தண்ணீரில் அவன் முகம்!!!!!!! 
எனக்கோ உயிர் போகும் தாகம் !!!!!!!!! 
கைப்பட்டால் கலைந்து விடும் அவன் முகம் ......... 
போகட்டும் என் உயிர்,,, அவன் முகத்தை பார்த்து கொண்டே.................




என் தோழி என்னிடம் சொல்லிய கடைசி வரிகள் ! 

உன்இதயதுடிப்புதான் 
என்சுவாசம் 
உன்விழி 
என்பார்வை ! 

என்சொல் 
உன் செயல் 
என்நடை 
உன்நம்பிக்கை 
இப்படியெல்லாம் இருந்துவிட்டு பிரியமனமில்லை 
அதனால்தான் 
உன்னைவிட்டு பிரியாமல் என்உடலைவிட்டு பிரிகிறேன் !


நம் பிரிவில் நீ கூறிச்சென்றது........... 

தனக்கு தான் அழகு 
எனக்கு நீ அழகு 
என் ஐம்புலன் தாண்டியும் 
நீ அப்படி ஒரு அழகு...... 

வாழும் நாட்களில் ஆசையில்லை 
உன்னைக்காணும் வரை... 
உன் பிரிவின் பின் 
ரசிக்க முடியவில்லை 
இயற்கையினை.... 

இப்பூமி உருண்டை என்பது 
ஒன்றில் உண்மை என்றால் 
மறுபடியும் நாம் 
சந்திக்க நேர்ந்தால் 
உன் கடைக்கண் மின்சாரத்தை 
பாய்ச்சிவிட்டுப்போ என்னுள்ளே....... 

மண்ணுலகம் இல்லா வாழ்க்கை 
மறுவுலகில் வேண்டாம்..... 

தாங்க முடியவில்லை... 
உன் குழந்தை 
சுமக்க முடியாப்பாக்கியம்.?? 

சின்னதாய் ஒரு ஆசை..... 

முடியுமென்றால் 
உனக்கு முன்னதான 
என் மரணத்தின் பின் 
உன் மனைவியின் 
வயிற்றில் 
உன் குழந்தையாய் 
உருவெடுக்க...

உன் பெய‌ர் 

இர‌வில் உற‌ங்கும் முன் 
உன் பெய‌ரை ஒரு முறை சொல்லிவிட்டு தான் உற‌ங்குகிறேன்.
உறங்கிய‌வ‌ள்  உற‌ங்கியே விட்டால் 

க‌டைசியாய் உச்சரித‌து உன் பெய‌ர் ஆக‌ வேண்டும் என்று.


என் இதயத்தில் இருக்கும் உன்னை 

நான் உன்னோடு எப்போது 
பேசுவேன் என்று... 

காத்துகொண்டு இருக்கிறேன்... 

என்னோடு பேசிய நீ சுலபமாக 
சொல்லிவிட்டாய்... 

என்னோடு இனி பேசாதே என்று... 

வார்த்தை கேட்ட வினாடி முதல் 
படபடக்கும் என் இதயம்... 

உள்ளுக்குள் ஒரு ஓரமாய் 
சோகம் இருந்தாலும்... 

வெளியில் நான் சிரிக்கிறேன்... 

என் இதயத்தில் இருக்கும் உன்னை... 

என் சோகம் தாக்கிவிட 
கூடாது என்று... 

என் உணர்வுகளை நீ புரிந்து 
கொள்ள போவது... 


நண்பன்  

உலகத்தின் 
எந்த மூலையில் 
நான் அடி பட்டு கிடந்தாலும் 
அரை நொடிக்குள் 
அலறியடித்து 
ஓடி வரும் அம்புலன்ஸ் 
---என் நண்பன் விஜய்கார்த்திக்


என் தந்தைக்கு ஒப்பானவன் நீ..........!!! 

என்னை நேசிக்கிறாய்.... 
எனக்காய் இன்பம் கொள்கிறாய்..... 
என் துன்பங்களில் துவண்டுபோகிறாய்..... 
எனில் அக்கறை கொள்கிறாய்...... 
என்னை எவரேனும் திட்டும் வேளைகளில் 
ஆதரவாய் நீ...... 
அணைக்க முட்படுகின்றாய் என் குறும்பினை எண்ணி...... 
குரல்கேட்கா நிமிடங்களில் திட்டியும் கொள்கிறாய்.... 
கல்விக்காய் அறிவுறுத்தல்.... 
கற்பனைக்கு தட்டிக்கொடுப்பு.... 
இத்தனையும் செய்யும் நீ 
என் இரண்டாம் தந்தையோ.......? 
இல்லை இல்லை 
என் தந்தைக்கு 
ஒப்பானவன் நீ..........!!!

உனக்காய் உனக்காய் மட்டுமே!  

அன்பாக அரவணைக்கும் 
உன் தோள்களிலே 
தலை சாய்த்து 
உன் மார்பு சூட்டில் 
குளிர் காய்ந்து 
உன் மடி மீது 
முகம் புதைத்து 

வாழப்போகும் 
அந்நாட்கள் தரும் 
இன்பத்தை…… 
சொர்க்கத்தை…… 

இன்னொரு ஜென்மம் எடுப்பினும் 
தரமுடியுமா 
இவர்களால் எனக்கு? 

உன்னாலே உயிர் பெற்றேன் 
உன்னாலே உணர்வுகளை 
சுவாசிக்கின்றேன் 

உனை பிரிவதனிலும் 
பிரிவது என் உயிராயிருக்க 
ஆசைப்படுகின்றேன் 
அன்பனே 
அன்பானவனே 

அடைக்கலம் கேட்கின்றேன் 
உனக்குள் மட்டும் 
சிறைக்கைதியாயல்ல 
ஆயுள் கைதியாய்! 

என் ஒவ்வொரு நாளையும் 
உனக்காய் உனக்காய் 
மட்டுமே விடிய ஆசைப்படுகின்றேன் 
நீ எனக்குள் வாழ்வதால்! 

உனை சிந்திக்க மறந்தால் 
என் இதயம் 
சின்னாபின்னம்தான் 
உயிர்ப்பதாயினும் 

உனக்காய் உயிர்க்கவே 
ஆசைப்படுகின்றேன் 
உயிர்விட்டு போவதாயினும் 
உனக்காய் உயிர்விட்டு போகவே 
ஆசைப்படுகின்றேன் 

என்னவனே (விஜய்கார்த்திக்) எனக்குள்ளேயே 

தொலைந்துவிடு 
என் இறுதிவரை! 


ஏமாற்றம்  

எனது mobilக்கு வந்த 
missed call எல்லாம்-திருப்பி 
அழைக்கிறேன்... 

நீயாக இருக்குமென்று.! 

பிறகு தான் தெரிந்தது-தவறியும் 
நீ என்னை நினைத்ததில்லை 
என்று... 


காதல் புரியவில்லை..! 

புதுமையாய் செய்ய நினைத்ததெல்லாம் 
உனக்கு புரியாமலே போக.. 

புரிய வைக்கும் முயற்சிகள் 
உள்ளம் அறியாமலே நோக.. 

எது கொண்டு உனக்கு 
என்னை சொல்வேன்.. 

எது செய்தால் 
உன் நெஞ்சம் வெல்வேன்.. 

ஈரமெனும் வெள்ளம் 
ஏழைக் குடிசையை 
அடித்தது போல்.. 

காதல் எனும் கடவுள் 
என் கண்ணை பறிக்குதே.. 

புரிதல் இல்லாமல் பறிபோவது 
எதுவானாலும் இருக்கட்டும்.. 

காதல் மட்டும் புரிதலின் 
அகராதியாய் மாறட்டும்..


மறக்க முடிய வில்லையே 

முட்கள் காலில் ஏறியதும் 
வெளியாகும் இரத்தத்தினால் 
ஏற்படும் வழியும் கூட 
சில நிமிடங்களில் 
மறந்து விடும்...! 

உன் நினைவை 
மனதில் ஏற்றியதும் 
ஏற்படும் இன்பமும் 

உன்னை பிரியும் போது 
ஏற்படும் வலியினையும் 
2 வருடம் ஆனா 
பின்னும் மறக்க 
முடிய வில்லையே 
எனக்கு...!


என் அன்பே.., 
பூக்கள் பேசும் பாசையில்.., 

பட்டாம்பூச்சிகள் உலவும் பாதையில்.., 

குயில்கள் பாடும் பாக்களில்..., 

மயில்கள் ஆடும் அழகினில்.., 

அருவி பொழிதலின் ரம்மியத்தில்.., 

கவிதை நடையின் கருப்பொருளில்..., 

சிற்றோடை நடந்து வரும் சலசலப்பில்.., 

தென்றல் தீண்டிய பொழுதுகளில்.., 

நான் காண்பதெல்லாம் என்னவனே.. 
உன் பிம்பம் தான்.., 
உன் கவிதை பார்வையும்,நேசமும் தான்.., 

நீ படர.., 
நான் தேரானேன்.., 

நீ பேச.., 
நான் மொழியானேன்.., 

நீ பார்க்க.., 
நான் ஒளியானேன்.., 

நீ பறக்க.., 
நான் சிறகானேன்.., 

ஆனால்..இன்று நீயின்றி ..., 
நான் மூச்சு காற்றுக்கே தவிக்கிறேன்.., 

ப்ரியமானவனே.., 
என் உயிராய் இருக்க வருவாயா..,?? 
உன் உயிர் காதலில்.., 
எனக்கொரு கவிதை தருவாயா..,??? 


என்..! 

கனவுகளை "கலைத்துவிட்டு" கவிதைகளை... விதைத்து "காணாமல்" போனவனே..! 

தொலைவில் "நீ" தொலைந்த... 
என் "இதயம்" தேடி நான்..! 

உன் நேசம் தேடி... 
இதோ..! 

காற்றோடும் மண்ணோடும்... 
"கவிதை" எழுதி அழுகிறேன்..! 

என்னவனே... 
"வாசமில்லாமல்" பூக்கள் வாழலாம்..! 

உன் "நேசம்" இல்லாத என்னை... 
நினைத்து பார்க்க முடியவில்லை..! 

கடைசியாய் அன்பே..! 

நீ என் "காதல்" தேடி வரும் வரை... 
கவிதைகளோடு காத்திருப்பேன்..! 

இல்லையேல்..! 

கல்லறையோடு சேர்த்திடுவேன்... 
"கவிதைகளோடு"


உன் அழைப்பொலி 

ஆயிரம் கவலையும் 
நொடியில் மாறும் 
உன் அழைப்பொலி கேட்டால்.... 

ஆயிரம் கோபமும் 
நொடியில் அடங்கும் 
உன் குரலொலி கேட்டால்.....

உன் அன்புப் பார்வைக்காய் ஏங்கிய உன்னவளாய்.........!! 

வானம் அழுதது 
கடல் ஓய்ந்தது 
சூரியன் கோபம்கொண்டு 
மறைந்துகொண்டான் 
விண்மீன்கள் ஆறுதல் கூறின 
நிலா பெண் வேதனை கொண்டு 
உன்னை வெறுத்துச் சென்றால் 
காற்றுக் கூட தழுவிச்சென்றது 
என்னை 
ஆறுதல் கூறுவதை எண்ணி.... 
உன் மௌனங்கள் 
என்னைக் கொன்றுவிடும் 
ஆயுதம் என்று 
தெரிந்துமா 
நீ மௌனம் காக்கின்றாய் 
இன்னும்......? 
ஒரு வார்த்தையேனும் பேசிவிடு 
வார்த்தையில் இல்லை 
உன் பார்வையினால் 
அதுபோதும் 
என் மனம் ஆறுதல் கொண்டு 
அமைதி பெறும்..... 
காத்திருக்கின்றன் 
உன் அன்புப் பார்வைக்காய் ஏங்கிய 
உன்னவளாய்.........!!


உன் மடி வேண்டும்! 

உன் மேலான என் காதல் 
தோற்று போனாலும் உன் 
மடியில் தூங்க வருவேன் 

ஒரு முறை இடம் கொடுப்பாயா 
சொர்க்கத்தில் தூங்கியபடியே 
நான் இறக்க வேண்டும்


என்னுடைய அவன்.. 

நீ என்னை பிரிந்தாலும் சரி.. 
என்னை மறந்தாலும் சரி.. 
என்னை வெறுத்தாலும் சரி.. 
என்றுமே.. 
நீ எனக்கு.. 
என்னுடைய அவன் தான்...


உன் நினைவால்...! 

காலை கடந்தன... 
மாலை கடந்தன... 
இரவு கடந்தன... 

உன் ஒரு துளி பார்வை என் மேல் 
படுமா என்று.... 

நீண்ட நேரம் ஆனதால் கண்கள் இருண்டு 
கனவுகளில் வின்மீன்கள் சொன்னது 
அடுத்த அழைபினில் சந்திக்கலாம் என்று .... 

என் மௌனம் என்னிடம் சொன்னது 
இது நீண்ட இடைவெளி அல்ல!! 

காலையில் சூரியன் உதிர்த்த பின்பு 
பூக்கள் எல்லாம் துளிர்வது போலே... 

உன் கேள்விக்கு விடை கிடைக்கும் என்று .... 

காத்திருக்கிறேன்....!!! 



நீ வருவாய்… 

நீ வருவாய்… எனை மீட்டெடுப்பாய் 
பூமிக்குள் புதைந்துகிடக்கும் 
என் கண்களை தோண்டி எடுப்பாய் 
உன்மீது பதித்துக்கொள்வாய் 
ஏளனமாய் பார்த்த பார்வைகளை எட்டி உதைப்பாய் 
துவண்டுபோன என் கால்களை 
உன் பின்னே வரவழைப்பாய் 
மரத்துப்போன உடலை 
உனக்காக மீண்டும் துடிக்க வைப்பாய் 
பழைய நினைவுகளில் சிக்கிய மனதை 
சிக்கெடுத்து சீராக்குவாய் 
கடந்ததை கடத்தி நிகழ்வாய் நிகழ்வாய் 
நிர்மூலமானதை நிச்சயம் செய்வாய் 
இடைவெளிகளை உன் புன்னகையால் ஒட்டி 
காலத்தை காலனுக்கு கொடுப்பாய் 
காமத்தை காதலுக்கு பலியிடுவாய் 
உன் ஆறடிக்குள் எனக்கும் ஓரிடம் நீ தருவாய் 
காதல் ஆறா மனதில் ஆறாக ஓடும்!



விளையாட்டு முடிந்ததடா... 

என் காதல் 
மணலில் செதுக்கிய சிற்பமல்ல... 
அலை அடித்ததும் கரைந்து விட...!!! 

எனது ஊனையும் உயிரையும் 
உனக்காகவே ... 
உனக்கு மட்டுமே... 
என்ற உறுதியுடன் 
கட்டியெழுப்பிய மாளிகையடா...!!! 

எனது ஒவ்வொரு துளி கண்ணீரும் 
வேண்டுகிறது... 
நீ எனக்கு மட்டுமே வேண்டுமென்று ...!!! 

காதல் தீச்சுடர் போல ... 
என்று எங்கோ படித்த ஞாபகம்.. 
இப்போது புரிந்து கொண்டேன் 
அது ஆறாத வடுவைத்தான் 
ஏற்படுத்துமென்று...!!! 

நீ வேறொருத்தியை காதலிப்பதை 
என்னிடம் தயங்கித் தயங்கிக் 
கூறிவிட்டாயே!!! 

அப்பொழுதே.. 
அக்கணமே... 
இடிந்தது மாளிகை.. 
இறந்தது நெஞ்சம்...!!! 

எப்படி சொல்ல முடிந்தது உன்னால்??? 
நண்பனாக மட்டுமே என்னிடம் 
பழகினாயென்று...!!! 

மறந்து விட்டாயா??? 
என்னிடம் பேசிய 
வார்த்தைகளை... 
கொஞ்சல்களை...!!! 

அதனால் தானடா.. 
ஒரு பெண்ணிற்கே உரிய 
நாணத்தை விட்டு கூறினேன்...!!! 

அது என் தவறா?? உன் தவறா??? 
உன் தவறே ஆனாலும் 
என் தவறாகவே இருக்கட்டும்.. 
அந்த ஒன்றாவது 
எனக்காக விட்டு செல்....!!!!


எங்கே நீ… என் காதலா 

என் கவிதை படிப்பவர்கள் 
எல்லாரும் என் காதலன் 
கொடுத்து வைத்தவள் 
என்கிறார்கள் 

அதற்காகவாவது உன்னைக் 
காதலிக்க வேண்டும் 
எங்கே நீ…


பிரியா வரம் 

நீ என்னை விட்டு பிரிந்து சென்ற 
போது எனக்கு கோபம் வந்தது 
என்னை விடவும் உன் வேலை தான் 
உனக்கு பெரியதோ என்று தோன்றியது 

எனக்காகத் தான் அந்த வேலைக்குச் 
செல்கின்றாய் என்பது கூட புரியாதவளாய் 
பிறகு தனிமையில் நான் உன் நினைவில் 
அழுதபோது எனக்கும் புரிந்தது 

என்னை போல் நீயும் நான் வேதனைபட கூடாது 
என்பதற்காக மனதினுள் என்னை நினைத்து 
அழுது இருப்பாயோ? 

நான் உன்னை நினைத்து ஏங்குவது போல நீயும் 
என்னை நினைத்து ஏங்க்கிக்கொண்டு இருப்பயோ? 

உன் ஸ்பரிசத்திற்காக நான் ஏங்குவது போல 
அங்கு நீயும் ஏங்கிக்கொண்டு இருப்பாயோ? 


காலையில் எழுந்தவுடன் உன் முகம் 
காணாமல் நான் தவிப்பதை போல் 
அங்கு நீயும் என் முகம் காணாமல் 
தவித்து கொண்டு இருப்பாயோ? 


என்னை தண்டிக்க வேறு வழி தேடு....  


உன் மௌனம் 
எனக்கான தண்டனை அல்ல.. 
என் நேசத்திற்க்கானது..... 

என் நேசமே 
நீதான் என்பதால் 
உனக்கானது...... 

உன்னை என் 
நேசமாக கொண்டது 
தவறு எனில்.... 

என்னை மட்டும் தண்டித்துவிடு.... 
என் நேசத்தை விட்டுவிடு!!!


உன்னாலே நான்.... 

உன்னாலே நான் இங்கு 
முதல் காதல் தான் கொண்டு 
உன்னினைவால் நாளும் வாழ்கிறேன்.... 

நெஞ்சோடு எனை வைத்து 
உன் கண்ணாலே என்னிடம் 
காதல் சொல்கிறாய் -மனதில் 
உன்னை விதைக்கிறாய்..... 

பகலெல்லாம் உன் நினைவாய் 
இரவெல்லாம் உன் கனவாய் 
ஏனடா என்னை கொல்கிறாய்...... 

ஒருமுறையேனும் 
தினம் உனை பார்க்க 
மனம் அது தவித்தோடும்.... 

ஒரு மொழியேனும் 
உன்னுடன் பேச 
கன்னி நெஞ்சம் காத்திருக்கும்.... 

அழகான உன் முகமும் 
அன்பான உன் காதலும் 
என்னுள்ளத்தில் சின்ன கலவரம் 
செய்து செல்லுமே....


சொல்லப்படாத காதல் 

அன்பே! 

உனக்காக கவிதை எழுத நான் கசக்கிப் போட்ட காகிதங்களுக்கு தெரியும். 

உன் மடி என்று நினைத்து நான் தலை சாய்ந்து நின்ற கதவிற்கு தெரியும். 

உன் நினைவில் கட்டியணைத்த என் தலையணைக்கு தெரியும். 

உனக்காக நான் வைத்த செடியில் முதல் முதல் பூத்த மலருக்கு தெரியும். 

என் மொளனத்தொடு மறைந்த வார்த்தைகளுக்கு தெரியும். 

உன் கனவில் நான் இழந்த என் நகங்களுக்கு தெரியும் 

உனக்காக நான் சிந்திய என் கண்ணீர் துளிகளுக்கு தெரியும். 

உன் மீது நான் கொண்டிருக்கும் காதலின் ஆழம் எவ்வளவென்று. 

உயிரற்றவைகள் உணர்ந்தவை கூட என் உயிரோடு உறைந்திருகும் உனக்கு புரியாததேன்..... 

உணர்ந்து விடு என்னவனே..!!! 

என் விரல்கள் உன்னை தீண்டாமல் இருந்திருக்கலாம் 

என் இதழ்கள் உன்னிடம் காதல் கதைகள் பேசாமல் இருந்திருக்கலாம் 

என் தேகம் உன்னை தீண்டி உன்னுள் இச்சை ஏற்படுதாமல் இருந்திருக்கலாம் 

இதயம் மட்டும் துடித்துகொண்டே இருக்கிறது உனக்காக மட்டுமே........ 


உண்மை அன்பு.......... 

நிலையில்லா மனமும் 
நித்திரையில்லா இரவுகளும் 
எனைக் கடந்தபொழுதிலும் 
கலங்கினதில்லையன்பே, 
கலங்கினேன் என் நிலை 
உணரமுடியாமல்....நீ 
நிலையாய் நிற்கமுடியாமல் 
கலங்கிநின்ற நிமிடத்தில் 
உன் நினைவுகளே எனக்கு உணவு....... 
உன் குரலின் ஓசைதான் எனக்கு குடி நீர்... 
உன் இதயத்துடிப்புதான் என் நோய்க்கான மருந்து. 
உனக்கொன்றை உரைக்கிறேன் 
நீயும் நானும் எங்கே 
பிரிந்துநிற்கிறோம்... 
நான் உன் அருகிலும் நீ என் அருகிலும் எப்போதும் சேர்ந்து தானே இருக்கின்றோம்............. 
ஆனாலும் 
உண்மையன்பின் வெளிப்பாடுதானே இது..........


கிடைப்பாயா? 

ஆவேசம் நான் கொள்கையில் அடக்கி வைக்கும் உன் 
ஆதிக்கம் கலந்த அன்பு. 

எங்கேனும் நான் எல்லை மீறினால் 
கண் ஜாடையிலேயே என்னைக் கட்டுப்படுத்தும் தீரம். 

உறவின் உச்சத்தில் என் மார்பு உணரும் 
உன்னிரு கண் ஈரம். 

இத்தனை கேட்டாலும் 
என் இதழ் அசைவது ஒரு கேள்விக்குத்தான். 

கிடைப்பாயா?


ஏமாற்றம்  

வாழ்கையின் எந்த 
கட்டத்திலும் - யாரையும் 
ஏமாற்றகூடாது என்று 
நினைப்பவன் - நான் 

ஆனால், 

என்னை ஏமாற்றிய உன்னை 


நான்.......... 


என்னசெய்ய ??????????


எங்ஙனம் வாழ்வேனோ ? 

நிலவுக்கு காத்திருக்கும் ஓர் அமாவாசை இருள் இரவாய் 
உயிருக்கு ஏங்கும் உளி செதுக்கிய ஓர் கற்சிலையாய் 

குளிருக்கு வாடும் ஓர் சுள்ளென்று சுடும் சூரியனாய் 
வெம்மைக்கு எதிர்பார்க்கும் ஓர் சில்லென்ற பனிக்கட்டியாய் 

சுவாச காற்றிற்கு துடிக்கும் ஓர் வலை மீனாய் 
ஒலிக்கும் ஒளிக்கும் கதறி தவிக்கும் ஓர் மாற்றுத் திறனாளியாய் 

காகிதத் பூவில் பூந்தேன் உண்ண வரும் ஓர் மதி கெட்ட வண்டாய் 
வரைந்த வண்ணக்கிளி ஓவியம் பேச நினைக்கும் ஓர் ஏக்க ஓவியனாய் 

விடுதலைக்கு விரும்பும் ஓர் வளையமிட்ட மந்தியாய் 
கரடி பொம்மையைக் கட்டி பிடித்து உறங்கும் பேதை மழலை நெஞ்சமாய் 

இவை போல் ......பறித்த மலரும் .....கனியும்..... மீண்டும் கிளை ஏறாது .. 
நடவாது .....எனத் தெரிந்தும் , என் மனம் ......நீ காலத்தின் கட்டாயத்தால்
எமனின் உடைமையானவள் என்று ஆகிப் போன பின்னும் இன்னும் 

உன்னையே நினைத்து மருகுவதும் சிந்தை மயங்குவதும் ஏனோ ?



ஆசை  

ஒவ்வொரு நாளும் 
என் பெயரை எழுதும் போது 
எல்லாம் நினைப்பேன் அடி 
எப்போது  நான்
என் பெயருக்கு 
பின்னால் 
 உன் பெயரை சேர்ப்பேன்என்று..! 



கை பேசி அழைப்பு  

உன்னை எப்போதும் கை பேசியில் அழைக்க 

எனக்கு பிடிக்கும் !! 

ஏனெனில் என் தவறிய அழைப்புகள் உன் 

அலைபேசியில் இருக்க வேண்டும் என்பதற்காக!! 

நான் எப்போதும் உன்னை தவற விடாமல் இருக்க 

என் தவறிய அழைப்பை நீ வந்த அழைப்பாக (receivedcall) 

மாற்றும் வரை நான் உன்னை அழைத்த 

வண்ணம் இருக்க , 

"அந்த பாழாய் போன உன் அலைபேசி யில் நூறு 

அழைப்புக்கு மேல் அழைத்தாலும் திரையில் 

வெறும் 99 தவறிய அழைப்பு என காட்டுகிறது!!!"---- 

என நீ என் முதல் 150 அழைப்பில் 

தெரியபடுத்திய போது தான் எனக்கு புரிந்தது !!! 


புதைக்கப்பட்ட வரலாற்று காதல் தோல்விகள் 
உன் போன்றவர்களால் இன்னும் 
விதைக்க படுவதேன்.. 

உன்னால் எனக்குள் வளர்க்கப் பட்ட 
நேசம் வேர் கூட மிச்சமின்றி 
பறிக்க பட்டதேன்.. 

விழியிடம் தோற்று வாங்கிய காதலை வலியோடு நினைந்து வாழ்வை 
தொலைக்கத் தானா.. 

அன்று சொல்வதற்கு 
தயங்கிய காதலை தான் 
இன்று யாரிடமும் 
சொல்ல முடியா ரணமானதேன். 

. நியாபகங்கள் சிறகு முளைப்பதை 
தடுக்க முடியவில்லை.. 

உன் சிந்தனையை மனதிற்க்கோ 
மறக்க தெரியவில்லை.. 

உன்னால் மட்டும் எல்லாம் முடிகின்றது.. 

பொய்மையை பூச்சூடி கொண்டதாளா.. 

கொன்று விட துடிக்கும் 
கோபங்களைக் கூட 
மிஞ்சுகிற நேசத்தை 
எப்படி மறக்க முடிகின்றது.. 

உன் போன்ற சிலரால்..

நீ சொல்லிச்சென்றது.... 

என்னை பார்த்த மறு நிமிடமே 
என்னிடம் நண்பனானாய்... 

பழகிய மறு நாளே உன்னிடம் 

 என் காதல் சொன்

மறு வார்த்தைக்கு காத்திராமல் 
விலகி சென்றாய்.... 

 சொல்ல காத்திருக்கின்றேன் 
நீ தான் என் காதல் என்று...


உன்னைப்பற்றி.... 

நீ என் தோழன் என நினைத்து 
உன்னைப்பற்றி நான் நாட்குறிப்பில் 
எழுதிய கவிதைகள் காலப்போக்கில் 
என்னிடம் சொன்னது 
நீ என் காதலனென்று.....


பாரதி கண்ட 
புதுமைப் பெண்ணாய்.... 
கண்ணகியின் மறுபிறப்பாய் 
கலியுகத்தின் மாறுதலில் 
கலங்கிப்போகும் பெண்களின் மத்தியிலே 
சாதிக்க பிறந்தவள் நான்... 
பெண்ணென்று பிறந்துவிட்டேனென்று 
சோர்ந்து போகமாடேன்.... 
துணிந்து நின்று 
துயர் களைந்து...... 
நிலைகொள்வேன் என் லட்சியம் 
நிறைவேற்றி நிலைநாட்டி 
லட்சியப் பெண்ணென என்னை 
நிலை நாடிடுவேன் இப்பாரினில் 
என் மரணத்தின் பின்னும்.... 
சாதனைப் பெண்ணாக 
பார் போற்ற......!!


கண் பேசும் வார்த்தைகள்.... 

ஆயிரம் வார்த்தைகளை 
அழகாய் சொன்னது, 
அவன் ஒற்றை பார்வை...

கண்ணீர்  

காதலனே.. 
நான் ஒவ்வொரு நாளும் கண்ணீர் 
வடிக்கின்றேன் 
உன்மேல் நான் வைத்த காதல் 
கரையட்டும் என்று


உன் நினைவுகளைத் தவிர... 

தொலைத்து விட்டேன் 
அனைத்தையும் சிறிதும் 
ஒட்டிகொண்டிருந்த 
மானத்தையும் தான் 
தலை சீவிய சீப்பும் 
அங்கம் மறைக்கின்ற 
ஆடையும் 
இரும்பு பெட்டிக்குள் 
இன்னும் பொக்கிஷமாய் 
கண்ணீரால் அழிந்த 
காதல் கடிதம் 
மாற்றப்பட்ட தொலைபேசி 
எண்கள்...... 
எல்லாமே எனக்கு புதிது தான் 
உன் நினைவுகளை தவிர.... 


இதயம் பேசுகிறது 

மரணத்தின் வலியைவிட கொடியவலி 
காத்திருப்பின் வலி ..... 
என் கவிதையின்வழி இறங்கும் 
காதலின் வலிகள் ...... 
என் கண்களின்வழி இறங்கும் 
விழிகளின் வலிகளை -உன் 
கைகளில் ஒற்றிக்கொள்வாயா??..... 

விடியல்கள் எல்லாம் விடியாமல் 
இருக்கின்றது !........... 
இருக்கின்ற நேரங்களில் 
இதயங்கள் கனக்கின்றது ...... 
நினைவுக்குள்ளேயே உன்னை 
ஒளித்து ஒளித்து வைத்து ..... 
ஒளிர்கின்றேன் நான் !!... 
என்னை வேதனை செய்துகொண்டும் 
என்னுள் ஒளிர்கின்றாய் நீ !!!!!!..... 

மறுபடி உனக்கு மடல் எழுத 
எத்தனை மாதங்களானாலும் 
உன் மனசை வாங்க வருவாள் 
என்னவன்  .........................; 

மனசை வாங்க மட்டுமல்ல 
என்னோடும் என் உயிரோடும் 

ஒன்றாக !.....வருவான் இவன்  !.....


மரணம் 

 என்  மரணம் 

வாழ்க்கையின் முடிவல்ல.... 

இன்னொரு 
பிறப்பிற்கான 
அடையாளம்.........! 


முடிய வேண்டாம் அந்த நிமிடங்கள் 

காலமே உன் கடமையை மறந்து போ 
என் காதலன் அருகில் இருக்கையில். 

நேரமே நீ நின்று போ, என் இனியவன் என்னிடம் மனம் விட்டு பேசுகையில். 

அவன் கரம் பிடித்து கண் பார்த்து பேசிகின்ற அந்த அற்புத நிமிடங்கள் நீண்டுக் கொண்டே போகட்டும். 

இயற்கையே நீங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.during my  outing wit vijaykarthic 2 vizag


நிழல் 

நீ தள்ளி நடந்தாலும் 
உன் நிழலுடன் நடப்பதை 
உன்னுடன் நடப்பதாய் 
எண்ணி கொள்கிறது மனது....

ஒரு பிறவி இன்பம்! 

உன்னிடமிருந்து பிரிக்குமென்று தெரிந்திருந்தால்... 
விடியலே வேண்டாமென்றிருப்பேன்! 
பரவாயில்லை... 
உன்னுடன் வாழ்ந்தது கனவாக இருந்தாலும்!எனது ஒரு பிறவியை வாழ்ந்த ஒரு இன்பம்... 
என் மனதுக்குல் நிலைதுவிட்டது


பிரிவு  

"உன்னை விட்டு பிரியும் போதெல்லாம் நான் தனியாக பேசி கொள்கிறேன் என் நிழலுடன் அல்ல உன் நினைவுகளுடன் " எப்போது நீ வருவாய் என்று


ஒருமுறை என்னைத் தீண்டிவிடு! 

என்னைத் 
தயவு செய்து 
தீண்டிவிடு! 

வசந்தம் தீண்டாத மரத்தை 
பட்டுவிட்டதென்று 
வெட்டி விடுவதுபோல் 

நீ 
தொட்டுத் தழுவாத 
தேகத்தை 
பிணமென்று எண்ணிப் 
புதைத்துவிடப் போகிறார்கள்....... 


காதலனாய் இருந்து பார்!!! 

மனிதனாய் இருந்தால் 
பூமியில் இருந்து நிலவை ரசிப்பாய். 
காதலனாய் இருந்து பார் - 
சராசரங்களில் இருந்து உன் 
காதலிக்கு கிரகங்களை பரிசளிப்பாய்.


வெகுநாட்கள் இல்லை! 

எழுதுகிறேன் என் எதிர்காலத்தை... 
எழுத்தால் அல்ல! எண்ணங்களால்! 
எண்ணங்கள் நிறைவேறும்போதுதான்... 
என் வாழ்விற்கு ஒரு அற்தம் கிடைக்கும்! 
அதற்கு இன்னும் வெகு நாட்கள் இல்லை..


உனக்கும் சேர்த்து நானே காதலிக்கிறேன் 

நீ ஒன்றுமே 
செய்ய வேண்டாம் 
சம்மதம் மட்டும் 
சொல் 
உனக்கும் 
சேர்த்து நானே 
காதலிக்கிறேன்….


உணர்ந்தேன்-என் மனமே என்னிடமில்லை!  

அமைதியான மனம் 
உணர்ச்சிகளால் பாதிக்கப்படுவதில்லை! 
அதனை இழந்த என் மனமோ 
உணர்ச்சிகளால் பற்றிஎரிகின்றது.. 

அமைதியைத் தேடி போவேனோ? 
அல்லது 
உணர்ச்சிகளைத் தோண்டிப் புதைபேனோ? 

'உன்னுள் உள்ளது உன் அமைதி" என 
பிறர்க்கூற உணர்ந்த நான் 
என்னுள் தேட முயன்ற போதே 
உணர்ந்தேன்.. 

என் மனமே என்னிடமில்லை என 

"உன்னுள்தான் உள்ளது என் மனம்" 
பின் அதன் அமைதிக்கு 
நீ என்ன செய்யப்போகிறாய்?? 


உறக்கம் பிடிக்கும்.. 
உள்ளே 
கனவாக நீ இருந்தால்..!! 

உணவு பிடிக்கும்.. 
நீ 
உருட்டி ஊட்டி விட்டால்..!! 

மயங்குவது பிடிக்கும்.. 
மயிலிறகாக 
உன் மடி கிடைத்தால்..!! 

வர்ணம் பூசுவது பிடிக்கும்.. 
உன் உதட்டின் மேல் 
என் உதட்டால் இடுவதாய் இருந்தால்..!! 

மரணம்கூட பிடிக்கும்.. 
கடைசி மூச்சு 
உன் தோளில் சாய்ந்து விடுவதாய் இருந்தால் ....!! 

உன் பெயரின் உச்சரிப்பால்......!! 

இதயத்தின் ஓசைகள் 
இசைத்துக் கொண்டிருப்பது 
அன்பே 
உன் பெயரை நான் 
உரைத்துக் கொண்டிருப்பதனால் 
உன் பெயரை நான் 
நிறுத்தும் நாள் என்றோ 
அன்று என் வாழ்வின் 
இறுதி நாளாகும் 
அன்பே.....!! 


இது தான் உண்மையான காதலா 

உன்னை பற்றி நினைக்க மாட்டேன் என்பேன்.... 
ஆனால், என் மனம் உன்னை நினைக்காமல் இருந்தது இல்லை 
உன்னை பார்க்க கூடாது என்று நினைப்பேன்..... 
ஆனால், என் கண்கள் உன்னை பார்க்க வேண்டும் என்று துடிக்கும் 
இனி உன்னை பேசவோ,பார்க்கவோ மாட்டேன் என்று உரைப்பேன்.... 
ஆனால், அப்படி உன்னை வெறுத்து பேசும் நேரங்களில் 
ஏன் என் கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது என்று தெரியவில்லை.... 
இதுதான் உண்மையான காதலா.... 
ஆனால், அந்த காதல் அவனிடம் துளி கூட இல்லை என்னும் போது தான் மனம் வலிக்கிறது......


உன்னால் மட்டுமே முடியும் 

உன்னால் மட்டுமே 
முடியும் 
இதயத்திற்கு 
இதமான 
அன்பு கொடுத்து 
பிரிவு எனும் 
இடியும் கொடுக்க…


மரணம் 

உன் பிரிவை விட மரணம் 
அழகானது தான் 

உன் நினைவுகளை விட மரணம் 
அழகானது தான் 

உன் விழிகளை நான் கானும் நொடிகளை விட மரணம் 
அழகானது தான் 

நீ என்னை கடந்து சென்ற அந்த நாட்களை விட மரணம் 
அழகானது தான் 

இதயத்தில் எரியும் கதல் தீயை விட மரணம் 
அழகானது தான் 

என் மனதில் உறையும் உன்னை விட மரணம் 
அழகானது தான் 

விதி வரைந்த இந்த நாடகத்தை விட மரணம் 
அழகானது தான் 

இந்த மொளானத்தை விட மரணம் 
அழகானது தான் 

கவிதைகள் வரைய விழிமூடும் நொடிகளை விட மரணம் 
அழகானது தான் 

நீ இன்றி என் நெஞ்சோடு நான் சுமக்கும் வலிகளை விட மரணம் 

மிகவும் அழகானது தான் 

மரணம் இன்னும் மிக அழகனது தான்.. 
அதுகும் உன் கைகளால் எனக்கு கிடைக்கும் என்றால்...!


எனது டைரியில் 

எனது டைரியில் உன்னை நினைத்து நான் கிறுக்கிய பக்கங்களில் சில வரிகள்..... எனது பெயர் என்ற தலைப்பில் உன்னுடைய உதடுகள் உச்சரிக்கும் வரை நான் உணர்ந்ததில்லை என்னுடைய பெயர் இத்தனை அழகாய் இருக்கிறது என்று!!!...... 


மறந்து விட்டாயே எப்போதும் போல்.. 

காதல் எனும் வார்த்தை 
எனக்கு கவிதை எழுதிட மட்டும் தான் சாத்தியமானதே.. 

தோள் சாய்ந்த உன் நேசம் 
தொடர்பு எல்லைக்கு வெளியில் போனதே.. 

புன்னகையால் சிகரம் ஏற்றினாய்... 
உன் புன்னகை கண்டதற்கா 
என்னை சிதையில் வாட்டினாய்.. 

கவிதைகள் கேட்டு கண் சிமிட்டினாய்.. 
கவிதை சொன்னதற்கா 
என் காதலை கழுவில் ஏற்றினாய்.. 

அறுந்து போன பட்டமாய் 
மனம் பிடி தேட அலைகிறது 
எவரோடும் சிக்க மறுத்து 
உன் இதயம் தேடியே பறக்கிறது.. 

வேறு துணை கண்டு 
வாழச் சொல்கிறாய் உன் போல்.. 

உயிர் உன்னோடு நீ 
பறித்து சென்றதை 
மறந்து விட்டாயே எப்போதும் போல்..


உனக்கு பிடிக்கும் என்பதால்...... 

தனிமையில் இருக்கையில் 

உன்னுடன் பேச 

வார்த்தைகளால் கவி பாடும் நான் 

உன் முன்னால் தோன்றையில் 

பேச வார்த்தை இன்றி ஊமையாகின்றேன் 

என் உதடுகள் பேசும் வார்த்தைகளை விட 

என் மௌனம் 

உனக்கு பிடிக்கும் என்பதால் 

என் கவிதைகள் பேசும் வார்த்தைகளை விட 

என் விழிகள் பேசும் கவிதை 

உனக்கு பிடிக்கும் என்பதால்


இவன் 
எனக்கு 
தாயுமானவன் மட்டும் அல்ல 
தந்தையுமானவன் 
அனைத்துமானவன் 


உன் நித்திரை 

உன் நித்திரையைக் களவெடுத்து – என் 
கண்ணுக்குள் வைத்துக்கொண்டேன் 
உன் இதயம் என்னிடத்தில் 
நிம்மதியாக உறங்கட்டும் என்று.


வாடிய மலாரனது என் மனம்தான்.............. 

கனவிலும் உன்னுருவம் 
காணத் துடிக்கும் 
என் 
பார்வையினில் விழுந்து 
காதலின் வலைதனில் 
சிக்கவைத்து 
இன்று 
வேதனையில் ஆழ்த்தி 
இன்பம் காண்கிறான் 
அதிலே புதுமலராய் அவன்...... 
வாடிய மலாரனது 
என் மனம்தான்..............


உனக்கு சளைத்தவள் அல்ல நான்...  



நீ மட்டுமல்ல 
உன் கைபேசியும் 
எப்போதும் சொல்லுகிறது 
பிஸி பிஸி என...... 

நான் மட்டும் என்ன... 
உனக்கு சளைத்தவளா?? 

இப்போதெல்லாம் 
நானும் பிஸி தான் 
நீ பிஸியா என 
அறிந்துகொள்வதில்!!!! 


காதல் சொல்ல வந்தேன் 

நட்பென்ற போர்வைக்குள் இன்னும் எத்தனை நாள் என் காதலை பூட்டி வைப்பது. 

முடிவு செய்தேன் இன்று சொல்லி விடலாம் என்று. 

விளைவு, இதோ கடற்கரையில் நீயும் நானும். 

எப்படி சொல்வேன் நண்பனை பார்த்து உன்னிடம் காதல் கொண்டேன் என்று. 

அவன் என்ன நினைப்பானோ, என்னை ஏற்பானோ, இல்லையென மறுப்பனோ? என மனதிற்குள் குழம்பித் தவிக்கிறேன். 

உன்னை நேருக்கு நேர் சந்திக்க இயலாமல் 

கடல் அலைகளை வெறித்துக் கொண்டிருக்கிறேன். 

மௌனத்தில் கரைந்து போனது நேரங்கள். 

உன் கை கடிகாரத்தை பார்க்கிறாய் என்னையும் பார்க்கிறாய் நேரம் ஆகி விட்டது கிளம்பளாமா என்றது போல். 

கடவுளே அப்படி கேட்டு விட கூடாது என மனதுக்குள் முனுமுனுத்துக் கொண்டிருந்தேன். 


நாட்களை தான் விட்டு விட்டேன். 


இந்த நேரத்தை விட மனம் இல்லை. நான் உன்னைக் காதலிக்கிறேன் உன் மனம் என்ன என்று. 

படபடத்த இதயம் இப்போது சராசரி வேகத்தில் துடித்தது. 

பாவை என் மனக் குழப்பம், இப்போது சந்தோஷமாய் மாறியது. 

என் கேள்விகள் பதில் ஆனது. இதயம் தென்றலை விட லேசாகி போனது. 

உன்னை கட்டி அணைத்து காதோரம் கேட்க வந்தேன் ஏனடா இத்தனை நாள் தவிக்க விட்டாய் என்று. 

ஏனோ ஆறு மாத பிள்ளை போல வார்த்தை இன்றி தவித்தேன். 

என் அன்னை மடியென, உன் மார்பில் முகம் புதைத்து கண்ணீர் மொழியில் சொல்கிறேன் என் காதலை.


என் வாழ்வின் அர்த்தம் நீ !! 

இரண்டு எழுத்து கவிதை நீ!! 
என்னை ஆட்கொள்ளும் இன்பம் நீ!! 

என் இரவின் கனவுகள் நீ!! 
என் இதயத்தை திருடிய கள்வன் நீ!! 

என் விரல்கள் மீட்டும் வீணை நீ !! 
அது இசைத்திடும் இனிய ராகம் நீ!! 

என் பகலின் சூரிய குளுமை நீ!! 
என் இரவின் நிலவின் வெப்பம் நீ!! 

என்னை இம்சிக்கும் இம்சை நீ!! 
என்னை ரசிக்கும் ராட்சசன் நீ !! 

என் கவிதையில் பிறக்கும் வர்ணனை நீ!! 
என் கோபத்தில் வெளிப்படும் வார்த்தைகள் நீ!! 

வெப்பத்தில் இளைப்பாறும் நிழலும் நீ!! 
என் மார்கழி மாத போர்வையும் நீ!! 

என் விரலின் நகமாய் இருப்பதும் நீ!! 
என் உயிரின் உயிராய் இருப்பதும் நீ!! 

என் கவிதைகளின் தொடக்கம் என்றும் நீ!! 
என் வாழ்வின் அர்த்தம் மொத்தமும் நீ !!

நடைபினமாக்கினாய் என்னை  

உன் நினைவுகளைக்கூட் 
என்னால் கொல்லை செய்ய முடியவில்லை 
நீயோ இல்லை என்ற ஒரு வார்த்தையில் 
என்னை நடைபினமாக்கினாய்.


ஊடல்....  


முத்தமிட்டு.... 

மோகம் கொண்டு... 

ஆரம்பித்த ஊடல்... 

மீண்டும்... 

முத்தமிட்டு.... 

முடித்து வைக்கப்பட்டது... 

கூடலின் இறுதியில்..... 




தோழியே வருவாயா ????? 

சிறு தவறுகள் நான் 
செய்யும் போது..... 

சிறுவனாய் எனை பாவித்து 
செல்லமாய் காதை திருகிடுவாயே ..... 

சிறுகாயம் நான் அடைந்தாலும் 
அதை சிலுவையாய் உன் 
நெஞ்சில் சுமந்தாயே ..... 

உண்ண நான் மறுத்த நாட்களில் எல்லாம் 
உடன் நீ இல்லை என்றாலும் ...... 

உடனுக்குடன் குறுஞ்செய்தி அனுப்பி 
கைப்பேசி முழுதும் பாசமாய் நிறைந்தாயே ....... 

கவிதைப் புத்தகம் நான் போட 
கை வளையல்கள் தந்தாயே ..... 

என் கவலைகள் தீர்ந்திட 
கடவுளிடம் நாளும் சென்றாயே ....... 

அந்த மாதுவை நான் மறக்க இயலாது 
மதுவில் மணிக்கணக்கில் திளைத்தபோது, 

நிமிடக் கணக்கில் எனக்காய் அழுதாயே ..... 
நித்தமும் என்னிடம் மது அருந்தாதே என்று 
இரு"கை" கூப்பி தொழுவாயே ....... 

உன் ஒவ்வொருகுறுஞ்செய்திக்கும் 
பதில் நான் அனுப்பவில்லை என்றால், 

கோபமாய் அலைப்பேசியில் அழைத்து 
வசைப்பாயே ...... 

குடித்துவிட்டு நான் 
எங்கே கிடந்தாலும் .... 

உன் ஸ்கூட்டி இல் 
என் வீட்டில் கொண்டு 
சேர்ப்பாயே... 

தேர்வுக்கு வராது 
வீட்டில் நான் துங்கிட்ட 
நாட்களெல்லாம்....... 

என் வீடு தேடி வந்து 
உதைப்பாயே ... 

படி ....படி ...என்று 
நாளும் என்னை வதைப்பாயே ... 

நம் நட்பின் ஆழத்தை கோபமாய் 
என்னில் விதைப்பாயே ..... 

முகச்சவரம் நான் 
செய்யவில்லை என்றால் கூட 
முகத்தை தூக்கிவைத்துக் கொள்வாயே ..... 

தினமும் பிள்ளையாரிடம் கூட்டிச்சென்று 
முப்பது தோப்புகரணம் போடச்சொல்லியே 
கொல்வாயே......... 

தோழியே எனக்காய் வாழ்ந்தாயே ......... 
இன்று ஏன் எனை விடுத்துச் சென்றாயே ....... 

என் இரவு நாட்களில் எல்லாம் 
நகராத நிலவாய் நின்றாய் ....... 

என் இருண்ட வாழ்க்கை முழுதும் 
அணையாத விளக்காய் வந்தாய் ........ 

காரணங்கள் ஏதுமின்றி 
என்னை தனித்துச் சென்றாய் ....... 

கல்யாணம் உனக்கு ஆன நாட்களிலிருந்து 
கடவுள் போல் பேசாது எங்கோ சென்றாய் ........ 

அருகில் இல்லை என்பதால் 
நிலவினை நாம் வெறுப்பதில்லை ! 

நீ என்னை அழைக்கவில்லை என்பதால் 
உன்னை நினைக்க நான் மறப்பதில்லை ! 

காத்துக் கொண்டிருக்கிறேன் தோழியே ........ 

முதியோர் இல்லத்தில் இருக்கும் அன்னை 
தன பிள்ளையின் வரவை எதிர்நோக்கி 
காத்துக் கொண்டிருப்பது போல் .......