புளூடூத்
புளூடூத் (Bluetooth) அல்லது திறக்கற்றை என்பது குறைந்த தொலைவிலுள்ள நிலையான அல்லது மொபைல் சாதனங்களிடையே தரவைப் பரிமாறிக்கொள்ள உதவும் ஒரு திறந்த தரநிலை கம்பியில்லா நெறிமுறை ஆகும். இவ்வாறு இது தனிப்பரப்பு வலையமைப்புகளை (PANகள்) உருவாக்குகிறது. இது RS232 தரவு வடத்திற்கான கம்பியில்லா மாற்றாகவே கருதப்பட்டது. இது ஒத்திசைவுச் சிக்கலைகளை வென்று பல சாதனங்களை இணைக்க வல்லது.
பெயரும் சின்னமும்
புளூடூத் என்ற சொல்லானது பழைய செருமானிய மொழியிலான "ப்ளாடோன்" (Blátönn) அல்லது தானிய மொழியிலான "ப்ளாட்டேண்ட்" (Blåtand) ஆகிய சொற்களின் ஆங்கில வடிவமாகும். இது பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த டென்மார்க்கின் முதலாம் ஹரால்ட் மன்னன் சிங்க் ஹெசால்ட் ப்ளாடண்ட் என்பவனின் சிறப்புப் பெயராகும். இந்த அரசனுக்கு புளூபெரீசு பழங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அதைச் சாப்பிட்டு அவனது பற்கள் எல்லாம் நீலக்கறை படிந்திருந்தது. இதனால் அம்மன்னனை "புளு டூத்" என்று அழைக்கத் தொடங்கினர்.அம்மன்னர் வேறுபட்ட டானிஷ் பழங்குடியினரை ஒன்றிணைத்து, அங்கிருந்த பல குறுநிலங்களை எல்லாம் ஒன்றாய்ச் சேர்த்து ஒரே பேரரசாகக் கட்டமைத்தார். புளூடூத் தொழில்நுட்பமும் அவரைப் போலவே தகவல்தொடர்பு நெறிமுறைகளை ஒரே தரநிலைக்குக் கொண்டு வரும் செயலைச் செய்கிறது என்பதால் இப்பெயர் வழங்கப்பட்டது.ஜெர்மானிய எழுத்துகளான
(ஹகால்) (Hagall) மற்றும்
(பெர்க்கனான்) (Berkanan) ஆகியவை இணைந்த இடாய்ச்சு இணைப்பெழுத்துக்களின் சேர்க்கையே புளுடூத் சின்னம் ஆகும்.


No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.