Saturday 28 July 2012

அட்டமா சித்திகள்


அட்டமா சித்திகள்


அட்டமா சித்தி என்று மரபாகக் கருதப்படும் எட்டுத் திறமைகளை அடைந்தவர்கள் சித்தர்கள் ஆவர். இவை இயற்கை அளித்த திறமைகள் எனவும் அற்புதத் தன்மை உடையன என்றும் கருதப்படுகின்றன. இவ்வாறான அட்டமா சித்திகளைச் சித்தர்கள் அட்டாங்க யோகப் பயிற்சியினால் பெற்றனர். 

அட்டமா சித்திகள்

  1. அணிமா - அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல்.
  2. மகிமா - மலையைப் போல் பெரிதாதல்.
  3. இலகிமா - காற்றைப் போல் இலேசாய் இருத்தல்.
  4. கரிமா - மலைகளாலும், வாயுவினாலும் அசைக்கவும் முடியாமல் பாரமாயிருத்தல்.
  5. பிராத்தி - மனத்தினால் நினைத்தவை யாவும் தன் முன்னே அடைய, அவற்றைப் பெறுதல்.
  6. பிராகாமியம் - கூடு விட்டுக் கூடு பாய்தல்.
  7. ஈசத்துவம் - நான்முகன் முதலான தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்தல்.
  8. வசித்துவம் - அனைத்தையும் வசப்படுத்தல்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.