Saturday 28 July 2012

திருநெல்வேலித் தமிழ்(about my native place)


திருநெல்வேலித் தமிழ்


தென்பாண்டி சீமை என்றும் அழைக்கப்படும் திருநெல்வேலிதூத்துக்குடி மாவட்டங்களிலும் பிற தென்தமிழக மாவட்டங்களிலும் பேசப்படும் வட்டார வழக்கு மொழிதிருநெல்வேலித் தமிழ் ஆகும்.[1] இவ்வழக்கை நெல்லை தமிழ் என்றும் அழைப்பர்.

தமிழ் மொழி பொதிகை மலையில் பிறந்தது என்பது ஒரு நம்பிக்கை. அந்தப் பொதிகை மலைத் தமிழே நெல்லைத் தமிழாகும். எனவே நெல்லை தமிழ் தமிழின் துவக்கநிலை மற்றும் தூய வடிவம் என்று சிலரால் கருதப்படுகிறது. பெரியோரை 'அண்ணாச்சி' என்று அழைக்கும் நெல்லைத் தமிழ் வேறு எந்தத் தமிழ் வட்டார வழக்கிலும் இல்லை.
இது தற்போதைய திருநெல்வேலிதூத்துக்குடிவிருதுநகர் மாவட்டத்தில் இராஜபாளையம்ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் திருநெல்வேலி வட்டார வழக்குத் தமிழ் பயன்பாட்டிலுள்ளது. திருநெல்வேலி நாட்டார் வழக்கு தனித்தன்மை வாய்ந்தது. 'கிறு', 'கின்று' போன்ற துணை வினைச் சொற்களைப் பழந்தமிழில் காண்பதரிது. திருநெல்வேலி வழக்கிலும் அவ்வாறே.எடுத்துக்காட்டாக,
  • நான் சொல்லுதேன் - நான் சொல்லுகிறேன்
  • அவன் நிக்கான் - அவன் நிற்கிறான்
  • நீங்க வருதியளோ? - நீங்கள் வருகிறீர்களோ?
  • ஏளா! நீ எப்ப வருத? - ஏ பிள்ளை ! நீ எப்பொழுது வருகிறாய்?
  • முடுக்குது - நெருக்குகிறது
  • சொல்லுதான் - சொல்கிறான்

சொற்கள்

  • அண்ணாச்சி - பெரியோர்களை மரியாதையாக அழைப்பது
  • ஆச்சி : வயதான பெண்மணி - Elderly Women;. தமிழகத்தின் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 'பாட்டி'யை ஆச்சி என்று அழைப்பார்கள். .
  • பைதா - சக்கரம் ( wheel; In maths (English) pie x Dia(meter) is circumference!!)
  • கொண்டி - தாழ்ப்பாள்
  • பைய - மெதுவாக
  • சாரம் - லுங்கி
  • கோட்டி - மனநிலை சரியில்லாதவர்.
  • வளவு - முடுக்கு,சந்து
  • வேசடை - தொந்தரவு
  • சிறை - தொந்தரவு
  • சேக்காளி - நண்பன்
  • தொரவா - சாவி
  • மச்சி - மாடி
  • கொடை - திருவிழா
  • கசம் - ஆழமான பகுதி
  • ஆக்கங்கெட்டது - not cconstructive (a bad omen)
  • துஷ்டி - எழவு (funeral)
  • சவுட்டு - குறைந்த
  • கிடா - பெரிய ஆடு (male)
  • செத்த நேரம் - கொஞ்ச நேரம்
  • குறுக்க சாய்த்தல் - படுத்தல்
  • பூடம் - பலி பீடம்
  • அந்தானி - அப்பொழுது
  • வாரியல் - துடைப்பம்
  • கூவை - ஆந்தை an owl (bird of bad omen)
  • இடும்பு - திமிறு (arrogance)
  • சீக்கு - நோய்
  • சீனி - சர்க்கரை (Sugar)
  • ஒரு மரக்கா வெதப்பாடு - சுமார் 4 1/2 செண்ட் நிலம்
  • நொம்பலம் - வலி
  • கொட்டாரம் - அரண்மனை
  • திட்டு - மேடு
  • சிரிப்பாணி - சிரிப்பு
  • திரியாவரம் - குசும்புத்தனம்
  • பாட்டம் - குத்தகை
  • பொறத்தால - பின்னாலே
  • மாப்பு - மன்னிப்பு
  • ராத்தல் - அரை கிலோ
  • சோலி – வேலை
  • சங்கு – கழுத்து
  • செவி – காது
  • மண்டை – தலை
  • செவிடு – கன்னம்
  • சாவி – மணியில்லாத நெல், பதர்
  • மூடு – மரத்து அடி
  • குறுக்கு – முதுகு
  • வெக்க - சூடு, அனல் காற்று
  • வேக்காடு - வியர்வை

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.