Wednesday 25 July 2012

10 கட்டளைகள்


சீர்த்திருத்த சபைகளில் 10 கட்டளைகள்

சீர்த்திருத்த திருச்சபைகள் பல காணப்படுகின்ற காரணத்தினால் அவை எல்லாவற்றினதும் கருத்துக்களை ஒன்றாக தொகுப்பது கடினமான விடயமாகும். பின்வருவன லூதரன் திருச்சபைகள் தவிர்ந்த ஏனைய திருச்சபைகளின் பொதுவான நோக்காகும்.
முகவுரை: 20:1-2 [6]
இது கட்டளைகளை ஏன் இசுரயேலர் கைக்கொள்ள வேண்டும் என்பதை சுட்டி நிற்கிறது.
  1. வசனம் 20:3 [7]
    இங்கு அன்னிய கடவுள்களை வணங்குதலை தடுக்கும் கட்டளையாகும். இங்கு வணங்குதல் மட்டுமல்லாது அன்னிய தெய்வங்களை மரியாதை செய்தல் போன்றவையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
  2. வசனங்கள் 20:4-6 [8]
    இவ்வசனங்கள் இரண்டும் சேர்த்து இரண்டாவது கட்டளையாக கொள்ளப்படுகிறது. இங்கு கடவுளை சிலைகளூடாக வழிபடுவது தடைசெய்யப்படுகிறது. இங்கு சிலைகளோ அல்லது வேறு உயிரினங்களையோ கடவுளாக கருதுவது பாவச்செயலாகச் சுட்டப்படுகிறது.
  3. வசனம் 20:7 [9]
    இதில் கடவுளின் பெயர், அவரது செயல்கள், வசனங்கள் போன்றவற்றிற்கு புனிதத் தன்மை கொடுக்கப்பட்டு அவற்றை வீணாக உச்சரிக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. இது சத்தியம் செய்வதற்கு எதிரான கட்டளையாக சிலரால் கொள்ளப்படுகிறது.
  4. வசனங்கள் 20:8-11 [10]
    இம்மூன்று வசனங்களும் சேர்த்து கடவுள் வழிபாட்டுக்கு நேரத்தை ஒதுக்க வேண்டும் என்ற நான்காவது கட்டளையாகக் கொள்ளப்படுகின்றது. இது வாரத்தின் இறுதிநாளை கடவுளுக்காக ஒதுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
  5. வசனங்கள் 20:12 [11]
    இக்கட்டளை ஒன்றே நேரடியாக செய்யவேண்டியதை சுட்டுகிறது. இது பெற்றோரை மதித்து மரியாதை அளிப்பதன் முக்கியத்துவத்தை விளக்குகிறது.
  6. வசனங்கள் 20:13 [12]
    இது மனித உயிரின் மாண்பினை விளக்குகிறது. இக்கட்டளையால் மனித உயிரை மாய்ப்பது, அல்லது மனித உயிருக்கு ஊறு இழைப்பது போன்றவை தடைசெய்யப்படுகின்றன.
  7. வசனங்கள் 20:14 [13]
    இதன் மூலமாக மற்றைவர்ள் மீதான காம எண்ணங்களும் அவை தொடர்பான நடவடிகைகளும் தடைசெய்யப்படுகின்றன.
  8. வசனங்கள் 20:15 [14]
    திருடலுக்கு எதிரான கட்டளையாகும். இதன் மூலம் சட்டப்படி நம்முடையவைகள் தவிர்த்த ஏனையவற்றை சட்டவிரோதமான முறையில் சேர்ப்பது தடைசெய்யப்படுகிறது.
  9. வசனங்கள் 20:16 [15]
    இது மக்களிடையே உண்மைபேசப்படுவதன் முக்கியத்துவதை கூறுகின்றது. முக்கியமாக ஏதாவது ஒரு சம்பவத்துக்கு சாட்சியாக இருக்கும் போது உண்மையை பேசவேண்டியதன் முக்கியத்துவதை சுட்டுகிறது.
  10. வசனங்கள் 20:17 [16]
    தனதல்லாத வேறு நபர் ஒருவரின் உடைமைகளையோ அல்லது அவரது துணைவரையோ( மனைவி, கணவன்) பெற்றுக்கொள்ளும் படி விரும்புவதை இக்கட்டளை தடைசெய்கிறது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.