Wednesday 25 July 2012

கிறித்தவ விவிலியம்


கிறித்தவ விவிலியம்

கிறித்தவ விவிலியம் இரு பெரும் பிரிவுகளை கொண்டுள்ளது. அவையாவன:
  • முதலாம் ஏற்பாடு அல்லது பழைய ஏற்பாடு (எபிரேய புனித நூல்கள்) மற்றும்
  • இயேசுவின் பிறப்புக்கு பின்னரான காலத்தில் எழுதப்பட்டு, இயேசுவின் போதனைகளையும் தொடக்க காலத் திருச்சபையின் வாழ்வையும் உள்ளடக்கிய புதிய ஏற்பாடுஎன்பனவாகும்.
பண்டைய மொழிகளான எபிரேயம் மற்றும் கிரேக்கத்தில் எழுதப்பட்ட நூல்தொகுதியாகிய விவிலியத்தின் மொழிபெயர்ப்புகளில் ஆங்காங்கே மாறுபாடுகள் காணப்படுகின்றன.

[தொகு]விவிலிய வரலாறு

விவிலியத்திலுள்ள நூல்கள் வரலாற்றின் வெவ்வேறு கட்டங்கள் பற்றி எடுத்துக் கூறுகின்றன. விவிலியத்தில் கூறப்பட்டுள்ள வரலாற்றைப் பின்வருமாறு சுருக்கலாம்:
  1. கடவுள் உலகையும் அதிலுள்ள சகலத்தையும் படைத்தார். மனிதனை அவர் தம் சாயலாக, ஆணும் பெண்ணுமாகப் படைதார். உலகம் பாவமற்றிருந்தது. மனிதர் கடவுளை விட்டு நீங்கி பாவம் செய்கிறார்கள்.
  2. மனிதரைப் பாவத்திலிருந்து மீட்க கடவுள் மனிதருக்கு விளங்கும் வகையில் தம்மையே அவர்களுக்கு வெளிப்படுத்துகிறார்.
  3. கடவுள் ஆபிரகாமை அழைத்து அவருக்குப் புதியதொரு நாட்டைக் கொடுக்கிறார். அவருக்குப் பெரிய சந்ததியைக் கொடுப்பதாகவும் வாக்களிக்கிறார்.
  4. கடவுள் மோசே வழியாகச் சட்டங்களை கொடுக்கிறார்.
  5. இஸ்ரயேல் மக்கள் பாவம் செய்வதும் பின்னர் கடவுளிடம் திரும்புவதுமாக சிலகாலம் கழிகிறது. அவர்கள் கடவுளின் சட்டங்களை மென்மேலும் அறிந்துகொள்கின்றார்கள்.
  6. இயேசு இவ்வுலகில் பிறக்கிறார். மோயீசனின் சட்டங்களைத் தெளிவுபடுத்தி அன்பு என்னும் புதிய சட்டத்தை கொடுக்கிறார்.
  7. இயேசுவின் சிலுவை மரணமும் அவருடைய உயித்தெழுதலும்.
  8. இயேசுவின் சீடரும் தொடக்க காலக் கிறித்தவரும்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.