Wednesday 25 July 2012

கிறிஸ்துவின் இரண்டாம் வருகை


கிறிஸ்துவின் இரண்டாம் வருகை


இரண்டாம் வருகையின் அறிகுறிகள்

இவற்றைச் சொன்னபின்பு, அவர்கள் கண்கள் முன்பாக அவர் மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார். மேகம் ஒன்று அவரை எடுத்துச் சென்று அவர்கள் பார்வையிலிருந்து மறைத்துவிட்டது. அவர் செல்லும் போது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே இருந்தார்கள். அப்போது வெண்ணுடை அணிந்த இருவர் தோன்றி, கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தைப் பார்த்துக் கொண்டே நிற்கிறீர்கள்? இந்த இயேசு உங்களிடமிருந்து விண்ணேற்றமடைந்ததைக் கண்டீர்களல்லவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார் என்றனர்.
தி.ப 1:9-11
மேலும் பெரும்பான்மையான கிறித்தவப் பிறிவுகள் இந்த நிகழ்வைப்பற்றி நம்புவது:
  1. உலகம் முழுமைக்கும் ஒரே பொழுதில் இது நிகழும்.[1] "ஏனெனில் மின்னல் கிழக்கில் தோன்றி மேற்குவரை ஒளிர்வது போல மானிட மகனின் வருகையும் இருக்கும்." —மத்தேயு 24:27
  2. எல்லோரும் காணும் படி இருக்கும்.[2] "பின்பு வானத்தில் மானிட மகன் வருகையின் அறிகுறி தோன்றும். அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிட மகன் வானத்தின் மேகங்களின்மீது வருவார். இதைக் காணும் மண்ணுலகிலுள்ள எல்லாக் குலத்தவரும் மாரடித்துப் புலம்புவர்." —மத்தேயு 24:30
  3. எல்லோரும் கேட்கும் படி இருக்கும்.[3] "அவர் தம் தூதரைப் பெரிய எக்காளத்துடன் அனுப்புவார். அவர்கள் உலகின் ஒரு கோடியிலிருந்து மறு கோடிவரை நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்கள்." —மத்தேயு 24:31
  4. இறந்த நீதிமான்கள் உயிர்த்தெழுவர்.[4] "கட்டளை பிறக்க, தலைமை வானதூதரின் குரல் ஒலிக்க, கடவுளுடைய எக்காளம் முழங்க, ஆண்டவர் வானினின்று இறங்கி வருவார்: அப்பொழுது, கிறிஸ்து மீது நம்பிக்கை கொண்ட நிலையில் இறந்தவர்கள் முதலில் உயிர்த்தெழுவர்." —1 தெசலோனிக்கர் 4:16
  5. ஒரே பொழுதில் இறந்து உயிர்த்தோரும், உயிரோடு இருப்போரும், கிறித்துவை சந்திக்க நடு வாணில் எடுக்கப்படுவர்.[5] "பின்னர் உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், அவர்களோடு மேகங்களில் எடுத்துக் கொண்டுபோகப்பட்டு, வான்வெளியில் ஆண்டவரை எதிர்கொள்ளச் செல்வோம். இவ்வாறு எப்போதும் நாம் ஆண்டவரோடு இருப்போம்." —1 தெசலோனிக்கர் 4:17

[தொகு]இரண்டாம் வருகையின் நாள்

"அந்த(இரண்டாம் வருகை) நாளையும் வேளையையும் பற்றித் தந்தை ஒருவருக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது. விண்ணகத் தூதருக்கோ மகனுக்கோகூடத் தெரியாது." என்று இயேசு மத்தேயு 24:36-இல் கூறியுள்ளார். எனினும் இரண்டாம் வருகை எப்போது நிகழும் என்பது குறித்து பல சபையினர் பலமுறை முன் அறிவித்தும் நடவாமல் போனது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.