Thursday, 12 July 2012

che guevara

சே குவேரா அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) (ஜூன் 141928 - ஒக்டோபர் 91967)அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபற்றிய போராளி எனப் பல முகங்களைக்கொண்டவர்.

பெயர்

சே என்பது வியப்புச்சொல் ஆகும். இச்சொல்லை அர்சென்டீனர்கள், குவேரனி இந்தியர்களிடமிருந்து பழகினர் என்பர். அவ்விந்தியர், எனது என்ற பொருளில் பயன்படுத்துவர் என்று மானுடவியல் அறிஞர் கூறுவர்.ஆனால், தென்னமரிக்கப் பாம்பாஸ் புல்வெளியினருக்கு, ஆச்சரியம், ஆனந்தம், வருத்தம், நாணயம், அட்சேபம், அங்கீகாரம் போன்ற பல மானுட உணர்வுகளை வெளிப்படுத்தும் சொல்லாக அமைகிறது. இடத்திற்கு ஏற்பவும், ஒலிப்புக்கு ஏற்றவாறும் அச்சொல் பயனாகிறது. இச்சொல்லின் மீதுள்ள பற்றால்,கியூபா புரட்சியாளர்கள், 'சே' என்று செல்லமாக அழைத்தனர். அவரது பெற்றோர், அவரை 'டேட்டி' என்று செல்லமாக அழைப்பர்.

கவனம் பெறும் நிகழ்வுகள்


  • 1955 ஜூலை - ஃபிடல் காஸ்ட்ரோவை சந்தித்தல். கரந்தடிப் போராளிகளுக்கான பயிற்சியை மேற்கொண்டிருக்கும் குழுவினருக்கு மருத்துவராக அவர்களுடன் இணைந்து பின் போராளியாகிறார். இங்குதான் அவர முதன் முதலில் சே என அழைக்க ஆரம்பித்தார்கள்.
    • ஆகஸ்ட் 18 - குவாதமாலாவில் தாம் சந்தித்த பெரு நாட்டைச்சேர்ந்த தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்தவரான ஹிடா காடியாவை மணந்துகொள்கிறார்.
  • 1956 பெப்ரவரி 15 - சே வுக்கும் ஹில்டாவுக்கும் ஹில்டா பிட்ரீஸ் குவேரா பிறக்கிறாள்.
    • ஜூன் 24 சே மற்றும் ஃபிடல் காஸ்ட்ரோவுடன் 26 பேர் கைதுசெய்யப்படுகிறார்கள். சே 57 நாட்கள் சிறையில் இருக்கிறார்.
  • 1957 மே 27, 28 - யுவேராப் போர். சூனூ 5 - இராணுவத்தினுடைய நான்காவது அணித் தளபதியாகிறார்.
  • 1958 ஜூலை - புரட்சிப்படை பாடிஸ்டாவின் படைகளை தோற்கடித்து முன்னேறுகிறது.
    • டிசம்பர் 28 - லாஸ் வியாசின் தலைநகரான சாண்டா கிளாராவின்மீது சே போர் தொடுக்கிறர்.
  • 1958 ஆகத்து 21 - சிரோ ரிடன்டோ எட்டாவது அணியின் தலைவராகப் பொறுப்பேற்று லாஸ் வில்லாசு மாநிலத்திற்கு போக உத்தரவு.
    • அக்டோபர் 10 நாளன்று, எஸ்கம்ப்ரே மலைகளை, அவரின் படைப்பிரிவு அடைகிறது.
    • திசம்பர் சான்டா கிளாரா முற்றுகை நடைபெறுகிறது. அம்மாதம் 28-31 நாள்வரை தலைமை ஏற்றுப் போரை நடத்துகிறார்.
  • 1959
    • ஜனவரி 1 - சாண்டா கிளாரா, சேவின் வசமாகிறது. பாடிஸ்டா ஓடித்தப்பிவிடுகிறார். சே ஹவானாவை நோக்கி முன்னேறுகிறார்.
    • ஜனவரி 2 - காஸ்ட்ரோ அறிவித்த பொது வேலை நிறுத்தத்தினால் நாடே ஸ்தம்பிக்கிறது.
    • ஜனவரி 3 - சே ஹவானாவை அடைந்து கபானா கோட்டையை கைப்பற்றுகிறார்
    • ஜனவரி 8 - காஸ்ட்ரோ ஹவானா வந்து சேர்கிறார்.
    • மே 17 - உழவுத்துறையை முன்னேற்றுவதற்கான திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன.
    • ஜூன் 2 - சேவும், அலெய்டா மர்ச்சும் திருமணம் செய்துகொள்கிறார்கள்.
    • ஜூன் 12 - வணிகம் மற்றும் தொழிநுட்ப ஒப்பந்தங்களை தீர்மானிப்பது தொடர்பாக சே நீண்ட பயணத்தை மேற்கொண்டு ஐரோப்பாஆபிரிக்கா, மற்றும் ஆசிய நாடுகளுக்கு செல்கிறார்.
    • அக்டோபர் 7 - உழவுத்துறையின் மறுமலர்ச்சிக்கான தேசிய நிறுவனத்தில் சே தொழிற்றுறைக்கு தலைவராக நியமிக்கப்படுகிறார்.
    • நவம்பர் 26 - சே, தேசிய வங்கியின் தலைவராக நியமிக்கப்படுகிறார்.
  • 1961
    • ஜனவரி 3 - அமெரிக்க அரசு கியூபாவுடனான ராஜதந்திர உறவுகளை முறித்துக்கொள்கிறது.
    • பெப்ரவரி 23 - சேவை அமைச்சராக்கி தொழிற்றுறை அமைச்சகம் நிறுவப்படுகிறது.
    • ஆகஸ்ட் 8 - உருகுவேயில் நடைபெற்ற அமெரிக்க நாடுகள் அமைப்பின் கருத்தரங்கில் கியூபாவின் சார்பில் சே உரை நிகழ்த்துகிறார்.
  • 1962
    • மே 20 - சேவுக்கும் அலெய்டாவுக்கும் கமீலா பிறக்கிறான்
    • ஆகஸ்ட் 27 - சே சோவியத்துக்கு பயணம் மேற்கொள்கிறார்
  • 1964
    • பெப்ரவரி 24 - சே வுக்கும் அலெய்டாவுக்கும் எர்னஸ்டிடோ பிறக்கிறான்.
    • மார்ச் 14 - சே கியூபா திரும்புகிறார்.
    • அக்டோபர் 31 - காங்கோவின் புரட்சிப்படையினருக்கு பயற்சி தர ஒரு கியூப படைக்குழுவினரோடு தாமும் காங்கோ புறப்படும் சே, விடை பெற்றுக்கொள்வதாக ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு கடிதம் எழுதுகிறார்.
    • டிசம்பர் - காங்கோ படையெடுப்பு தோல்வியடைந்ததன் பிறகு சே இரகசியமாக கியூபாவுக்கு திரும்பி வருகிறார். பொலிவியா படையெடுப்புக்காக வீரர்களை திரட்டுகிறார்.
  • 1966
    • நவம்பர் - சே மாறு வேடத்தில் பொலிவியா போய் சேருகிறார்.
  • 1967
    • மார்ச் 23 - முதல் கரந்தடி தாக்குதலில் சேவின் அணி வெற்றிகரமாக பொலிவிய ராணுவப்பிரிவை சிதறடிகிறது.
    • ஏப்ரல் 16 - ஆசிய, ஆபிரிக்க, லத்தீனமரிக்க நாடுகளின் ஒற்றுமைக்காக நடத்தப்பட்ட முக்கண்டக் கருத்தரங்கில் இரண்டு மூன்று அல்ல, பல வியட்நாம்களை படைக்கலாம் என்ற சேவுடைய அறிக்கை வாசிக்கப்படுகிறது.
    • ஆகஸ்ட் 4 - ஒரு விட்டோடி, பொலிவிய படைக்கு தலைமை தாங்கி நடத்தி சே அணியின் ஆயுத தளத்தை நோக்கி முன்னேறுகிறான்.
    • செப்டெம்பர் 26 - கரந்தடி வீரர்களை பொலிவிய அரச படைகள் சுற்றிவளைக்கின்றன.
    • அக்டோபர் 8 - மிஞ்சியிருந்த சே உட்பட 17 வீரர்களும் பொறிக்குள் அகப்பட்டுக்கொள்கிறார்கள். போரில் காயமடையும் சே கைதுசெய்யப்படுகிறார்.
    • அக்டோபர் 9 - சே கொலைசெய்யப்படுகிறார்
  • 1968
  • 1995 - கொலை செய்து புதைக்கப்பட்ட சேவினதும் மற்ற இரு வீரர்களதும் உடலங்களை தேடியெடுக்கும் பணி தொடங்குகிறது.
  • 1997
    • ஜூன் 28 - பொலிவியாவின் வேலேகிரான்ட் அருகே கனடா தே அர்ரோயாவில் ஏழு வீரர்களின் சடலங்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்படுகிறது.
    • ஜூலை 14 - சடல எச்சங்கள் கியூபாவை வந்தடைகின்றன.
    • அக்டோபர் 13 - ஹவானா புரட்சி சதுக்கத்தில் விழா நடைபெறுகிறது.
    • அக்டோபர் 14 - சேவின் சடல எச்சங்கள் சாண்டா கிளாராவுக்கு மாற்றப்படுகின்றன.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.