Thursday, 12 July 2012

டென்சின் கியாட்சோ


டென்சின் கியாட்சோ, 14வது தலாய் லாமா


Tenzin Gyatzo foto 1.jpg
ஆட்சிக்காலம்நவம்பர் 17 1950–இற்றைவரை
முடிசூட்டு விழாநவம்பர் 17 1950
முழுப்பெயர்ஜெட்சுன் ஜம்பேல் ஙவாங் லொப்சாங் யெஷெ டென்சின் கியாட்சோ
பிறப்பு6 சூலை 1935(அகவை 77)
பிறப்பிடம்கிங்காய், சீனா
முன்னிருந்தவர்துப்டென் கியாட்சோ
அரச குடும்பம்தலாய் லாமா
தந்தைசோக்கியோங் செரிங்க்
தாய்டிக்கி செரிங்க்
ஜெட்சுன் ஜம்பேல் ஙவாங் லொப்சாங் யெஷெ டென்சின் கியாட்சோ (திபெத்திய மொழி: Jetsun Jamphel Ngawang Lobsang Yeshe Tenzin Gyatso/ བསྟན་འཛིན་རྒྱ་མཚོ་, பிறப்பு லாமோ தொங்ருப் (Lhamo Döndrub/ལྷ་མོ་དོན་འགྲུབ, ஜூலை 61935திபெத்தின் 14 தலாய் லாமா ஆவார். இவர் திபெத் மக்களின் ஆன்மீக அரசியல் தலைவர் ஆவார். இவர் உலக அரங்கில் ஒரு முக்கிய தலைவராகவும் பார்க்கப்படுகிறார். இவரே திபெத் மக்களின் மரபு வழித் தலைவராக திபெத் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், திபெத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் சீனா இதை ஏற்றுக் கொள்ள வில்லை. 1958 ஆண்டு திபெத் மீது சீன அரசு மேற்கொண்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்துஇந்தியாவின் தரம்சாலாவிற்கு புகலிடம் வந்து வாழ்கிறார்.
இவர் ஆன்மீகம் அரசியல் துறைகளில் மட்டுமல்லாமல் அறிவியலிலும் ஆர்வம் கொண்டவர். ஆன்மீகத்தை அறிவியல் எங்கு பிழை என்று ஆதார பூர்வமாக நிரூபிக்கிறதோ அதை ஆன்மீகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று The Universe in a Single Atom என்ற அவரது ஆங்கில நூலில் குறிப்பிடுகிறார். இவர் தியானம் குறித்த பரிசோதனைக்கூட ஆராய்ச்சிகளிலும் தமது ஒத்துழைப்பை வழங்கியிருக்கிறார்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.