Saturday, 1 September 2012

நாத்தூராம் கோட்சே


நாத்தூராம் வினாயக் கோட்சே (மராத்தி: नथूराम विनायक गोडसे) (மே 19, 1910 – நவம்பர் 15, 1949) மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கொலையாளி. காந்தியை கொன்ற வழக்கில் மரணதண்டணை அளிக்கப்பட்டு, அம்பாலா சிறையில் நவம்பர் 15, 1949, அன்று இறக்கும் வரை தூக்கலிடப்பட்டார்.


இளமைக்காலம்

நாத்துராம் கோட்சே புனே மாவட்டம் பாரமதியில் பிறந்தவர். இவருடைய தந்தை வினாயக் வாமன்ராவ் கோட்சே ஒரு தபால் அலுவலக ஊழியர்; இவருடைய தாயார் லட்சுமி (திருமணத்திற்கு முன் தாயாரின் பெயர் கோதாவரி). பிறந்தவுடன் இவருக்கு ராமச்சந்திரா என்ற பெயர் இடப்பட்டது.இவர் பெற்றோருக்கு ஏற்கனவே 3 மகன்கள் மற்றும் 1 மகள் பிறந்திருந்தனர் அதில் 3 மகன்கள் பிறந்த சில நாட்களில் குழந்தையிலேயே இறந்தனர். அதன் காரணமாக ஏற்பட்ட அச்சத்தால், அவருக்கு மூக்குத்தி அணிவித்து அவரை பெண்பிள்ளைப்போல அலங்கரித்து சிறிது காலம் வரை வளர்த்தனர். அதனால் அவருக்கு நாதுராம் என்றப் பட்டபெயர் ஏற்பட்டது. மாராத்தியில் நாதுராம் என்பது மூக்குத்தியைக் குறிக்கும் சொல்.இவருக்குப்பின் ஒரு தமையன் பிறந்தார் அவர் பெயர் கோபால் கோட்சே அவர் ஆண்பிள்ளைப் போல் வளர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாத்துராம் தன் ஐந்தாவது வகுப்பு வரை பாரமதியிலும் பின்பு ஆங்கில வழிக்கல்வி கற்கவேண்டி புணேயில் தன் மாமியின் வீட்டில் தங்கி படித்தார்

காந்தியை கொன்ற வழக்கு மற்றும் தண்டணை

கோட்சே மகாத்மா காந்தியை ஜனவரி 30, 1948 அன்று மாலை நேர காந்தியின் பிரார்த்தனை கூட்டத்தில் அவரை மண்டியிட்டு வணங்கியபின் பெரேட்டா என்னும் இத்தாலிய அரைத் தானியிங்கிக் கைத்துப்பாக்கியால் காந்தியின் நெருக்கத்தில் மூன்று முறை சுட்டுக் கொலை செய்தார். காந்தி இந்தியப் பிரிவினைக்கு ஆதரவாக செயல்படுவதை எதிர்த்து இக்கொலைச் செயல் புரிந்தனன். உடனே காவல் துறையினரிடம் தானே சரணடைந்தார். மே 27, 1948 ல் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது தன்தரப்பு வாதங்களுக்காக அவர் எதிர்த்து வாதாடவில்லை. அவர் தரப்பு வழக்குரைஞர்கள் மிகவும் தந்திரமாக அவர் மனநிலையை காரணம் காட்டி வாதாடினர். இருப்பினும் நவம்பர் 8, 1949 அன்று கோட்சேவுக்கு மரண தண்டணை வழங்கப்பட்டது. அவருடன் சேர்த்து நாராயண் அப்தேவுக்கும் மரணதண்டணை வழங்கப்பட்டது. இருவரும் அம்பாலா சிறையில் நவம்பர் 15, 1949 அன்று இறக்கும் வரை தூக்கிலிடப்பட்டனர்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.