Sunday, 30 September 2012

காப்பிய இலக்கியம்



சிலப்பதிகாரம்
தமிழில் தோன்றிய முதல் காப்பியம்
சிலம்பு எனும் காலில் அணியும் காலணியால் பெற்ற பெயர்.
தமிழ் பண்பாட்டை, கலைகளை காட்டுகின்ற காப்பியம்.
பின்னால் வந்த சிற்றிலக்கியங்களுக்கு வித்திட்ட காப்பியம்.
ஆசிரியர் - இளங்கோவடிகள்
3 காண்டங்கள்
30 காதைகள்

மணிமேகலை
கோவலன் மாதவியின் மகளான மணிமேகலையின் கதை. மாதவி துறவியான கதை.
இடையில் அணியும் ஆபரணத்தால் பெற்ற பெயர்.
சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டை காப்பியம் என்று போற்றபடுகின்றன.
மாதவியின் நாட்டியக் கலை விளக்கமாக கூறப்படுகிறது.
ஆசிரியர் - சீத்தலை சாத்தனார்.
உலகில் வாழ முதலில் உணவு, மானத்தைக் காக்க உடை, பாதுகாப்போடு வாழ தங்கும் இடம் (வீடு) இவைதான் சமுதாயத்தின் அடிப்படைத் தேவை. இதுதான் மனித அறம் என்று கூறுகிறது இந்நூல். மனித வாழ்கைக்குத் துணை அவரவர் செய்யும் நல்வினைகளே என்று கூறுகிறது.
வாழ்க்கை தத்துவங்களைக் கூறுவதோடு இயற்கையையும் அழகாக கூறியுள்ளது.
30 காதைகள் அகவற்பாக்களால் அமைந்தது.
காலம் - கி.பி 250ஐ ஒட்டி எழுந்தவை.

பெருங்கதை
சிலம்பு, மணிமேகலைக்கும் பிறகு அகவற்பாவால் எழுதப்பட்ட காப்பியம்.
உதயணன் கதையைக் கூறுவது.
ஆசிரியர் - கொங்கு நாட்டு குறு நில மன்னர்களில் ஒருவரான கொங்கு வேளிர்
முதலில் தோன்றிய சமன காப்பியம்
காலம் - 7ஆம் நூற்றாண்டு
முதல் இறுதிப் பகுதிகள் கிடைக்கவில்லை.

சீவகசிந்தாமணி
சீவகனின் வரலாற்றை கூறும் காப்பியம். தமிழில் தோன்றிய முதல் விருத்த காப்பிய.
ஆசிரியர் - சமண முனிவர் திருத்தக்க தேவர்
காலம் - 10ஆம் நூற்றாண்டின் முன் பகுதி

வளையாபதி
ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று. 72 பாடல்கள் கிடைத்துள்ளன.

குண்டலகேசி
சுருண்ட கூந்தலை உடையவர் என்பது பொருள். முழு நூலும் கிடைக்கவில்லை
19 பாடல்கள் கிடைத்துள்ளன
இது பௌத்த சமய நூல்.

சூளாமணி
தலைக்கு அணியும் ஒரு ஆபரணம்
சமண மத கொள்கைகளைப் பரப்புவது நூலின் நோக்கம்
ஆசிரியர் - தோலாமொழித் தேவர்
12 சருக்கங்களையும் 2131 பாடல்களையும் கொண்டது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.