பெத்தலகேம் குறவஞ்சி என்ற நூல் தொண்ணூற்றாறு சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகும். உலாப்போகும் மன்னனையோ தெய்வத்தையோ கண்டு மையல் கொண்ட தலைவி வருந்துவது. வீதியிலே வந்த குறத்தியைக் குறி கேட்பதும் , குறத்தி தனது மலை வளம், நாட்டுவளம் ஆகியவற்றை வாழ்த்தி தலைவியின் கையைப் பிடித்து அவளின் மனக்கருத்தை உணர்ந்து உரைத்தலும், குறவன் வருகையும், உரையாடலும், வாழ்த்தி விடை பெறுதலும் ஆகியவை குறவஞ்சி நூலின்கண் இடம் பெறும். இதனை குறவஞ்சி நாடகம் என்பர்.
பெத்தலகேம் குறவஞ்சியில், உலாவரும் மன்னர் இயேசுவாகவும், தேவமோகினியாகிய தலைவி சீயோன் மகளாகவும், குறவஞ்சி விசுவாசமாகவும், குறிகூறுதல் தீர்க்க தரிசனமாகவும், சிங்கன் குருவாகவும், நூவன் உபதேசியாகவும், அவர்கள் பிடிக்கும் பறவைகளாக மக்களும், அதற்குப் பயன்படுத்தப்படும் வலையாக இறைவாக்கு என்ற நற்செய்தியும் உருவகிக்கப்பட்டு இந்நூல் முற்றுருவகமாகத் திகழ்கின்றது.
இந்நூலினை இயற்றியவர் தஞ்சை வேதநாயக சாத்திரியார் ஆவார். காலம் 18-ஆம் நூற்றாண்டு.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.