நம் அழகை வெளிப்படுத்துவதில் ஆடைக்கு முக்கியப் பங்கு உண்டு. ஒல்லியாக இருக்கும் பெண்கள் இறுக்கமாக ஆடை அணியக் கூடாது. ரவிக்கையும் இறுக்கமாக இல்லாமல் சற்றுத் தொளதொளவென்று அணிய வேண்டும். பருமனான உடல்வாகு கொண்டவர்கள் இறுக்கமாக உடை அணிவது பருமனைக் குறைத்துக் காட்டும்.
* புடவை இளவண்ணமுடையதாக இருந்தால் ரவிக்கை சற்று அடர் வண்ணம் உடையதாக இருப்பது நல்லது. புடவையின் வண்ணம் அடர்த்தியானதாக இருந்தால், ரவிக்கை மெல்லிய வண்ணத்தில் இருப்பது நல்லது. ஒரே நிறத்தில் புடவை, ரவிக்கை என்று பார்த்து வாங்குவதை விட, இவ்வாறு அணிவது அழகை மேம்படுத்திக் காட்டும்.
* 'ஷாப்பிங்' போகும்போது சிறிய பூக்கள் போட்ட இளம் வண்ண 'நைலான்' புடவைகளையே பயன்படுத்துங்கள். கோவில், கடற்கரை போன்ற பொது இடங்களுக்குச் செல்லும்போது அடர்வண்ணம் கொண்ட 'காட்டன்' புடவைகளை ஏற்றவை.
* உயரமாக உள்ள பெண்கள், தங்கள் உயரத்தைக் குறைத்துக் காட்ட குறுக்குக் கோடு போட்ட புடவைகளைத் தேர்ந்தெடுத்து அணிய வேண்டும். குள்ளமான பெண்கள், உயரத்தைச் சற்று அதிகரித்துக் காட்ட நேர்வாக்கில் கோடு போட்ட புடவைகளை அணிய வேண்டும்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.