Sunday, 30 September 2012

முதுகுவலி ஒழிய


முதுகுவலி ஒழிய

நீண்ட நேரம் அமர்ந்திருத்தல்

நிற்பதைக் காட்டிலும் அமர்ந்திருக்கும்போது முதுகுத் தண்டுவடத்துக்கு 40 சதவிகித அழுத்தம் அதிகரிக்கிறது. நம்மில் பலர் மணிக்கணக்கில் இருக்கையில் அமர்ந்துகொண்டே இருக்கிறோம்; சரியான நிலையில் அமர்வதும் 
இல்லை. அவ்வப்போது எழுந்து நடப்பதையோ, சிறிய நேரம் ஓய்வு எடுப்பதையோ வேலைப் பளு காரணமாக மறந்துவிடுகிறோம். இப்படி உடல் செயல்படாமல் இருப்பதால், தசைகள் தளர்வுற்று முதுகு வலி வருகிறது. நாற்காலியில் அமரும் போது, உங்கள் பாதங்கள் தரையில் சரியாகப் படும்படி அமர வேண்டும். முதுகின் அனைத்துப் பகுதிகளும் நாற் காலியில் சாய்ந்து இருக்குமாறு நிமிர்ந்து அமர வேண்டும்; குறிப்பாக கீழ் முதுகு நன்றாகப் படும்படி அமர வேண்டும். என்னதான் அலுவலக வேலையாக இருந்தாலும்கூட அவ்வப்போது தண்ணீர் குடிக்க, சக ஊழியர்களிடம் கலந்துரையாட என்று நடப்பதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.