உலகில் உயிர்வாழும் பூச்சி இனங்களில் 10 இலட்சம் மேலான இன வகைகள் இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது.
எறும்புகளில் மட்டும் 10,000 மேலான இன வகைகளில் உயிர்வாழ்வது கண்டறியப்பட்டுள்ளது.
எறும்பு கூட்ட குடியிருப்பில் (colony) ராணி (அரசி) , ஆண் எறும்பு , வேலையாள் (worker) , காவலாளி (soldier) எனும் நான்கு வகுப்புக்களை (சாதிகளை) கொண்டுள்ளது.
ராணி எறும்பும் ஆண் எறும்பும் இனப் பெருக்கத்திற்கும் , வேலையாட்கள் உணவு சேகரிப்பதுடன் கூடுகட்டுவதும் முக்கிய பொறுப்பு , காவலாளி எறும்பு அனைத்தினையும் பாதுகாப்பதாகவும் உள்ளது.
அதிகபட்சமாக ராணி எறும்பு 30 வருடம் வரையும் , வேலையாட்களும் காவலாளிகளும் 3 வருடம் வரையும் , ஆண் எறும்பு சிலமாதமும் உயிர்வாழ்கின்றன.( பூச்சி இனங்களில் மிகவும் அதிக காலம் உயிர்வாழக்கூடிய இனமாக ராணி எறும்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.)
ஒரு எறும்பு கூட்டத்தில் (கூட்டில் அல்லது புற்றில்) சில நூறு முதல் பல லட்சம் வரையிலான எறும்புகள் உயிவாழ்கின்றன.
ஒரு கூட்டத்திற்கு ஒன்றிற்கு மேற்ப்பட்ட ராணிகளும் இருக்கும் அதேவேளையில் ராணி இல்லாது எறும்பு கூட்டம் இருப்பதும் இல்லை.
எறும்பு இனமானது மிகச் சிறியது முதல் 5 சென்றிமீற்றர் (2அங்குலம்) வரை உள்ளன.
10,000 மேலான வகைகளில் உள்ள எறும்புகளின் உணவானது தானியம் , பங்கஸ் , தேன் என பல வகைகளில் அடங்கும்.
மிகவும் சிறந்த மேப்ப சக்தி (வாசனை நுகரும் சக்தி) , கண் பார்வை உடைய எறும்புகளுக்கு சவாசப்பைகள் இல்லை.(எறும்பின் மேல்பகுதியில் உள்ள சிறிய பலதுளைகள் மூலமாக ஒக்சியினை உடலில் உறிஞ்சுகின்றன.)
எறும்புகள் தமது உடல் எடையை விடவும் 50 மடங்கு சுமையினை சுமக்க வல்லன.
எறும்பு பற்றிய கற்றல் (ஆராட்சி) myrmecology என அழைக்கப்படுகின்றது.
எறும்பின் மூளையில் 250,000 கலங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
உலகின் மூன்றில் ஒரு பங்கு எறுப்புக்கூட்டம் அமேசன் காட்டினில் இருப்பதாக ஆராட்சிகள் குறிப்பிடுகின்ற்ன.
மிகவும் காத்திரமான சமூக அமைப்பினையும் பிராந்திய எல்லைகளையும் கொண்டுள்ள எறும்பு இனமானது வெப்பமானதும் ஈரப்பதன் உள்ளதுமான பகுதிகளில் பெருமளவில் கூட்டங்களை கொண்டுள்ளது.
குடியிருப்பு இடங்களாக நிலம் , மரம் , நிலத்தின் கீழ் என பல சிக்கல் நிறைந்த இயற்கையுடன் கூடிய வாழ்வியலை கொண்டுள்ள எறும்பு இனமானது மிகச்சிறந்த உயிர் தப்பி வாழும் (survival) உயிரினங்களில் முக்கியமானதகவும் உள்ளது.எறும்புகளின் மிகவும் ஒழுங்காக கட்டமைக்கப்பட்டிருக்கும் சமூக வாழ்வு , தமது வாழ்விடத்தை தமக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கும் இயல்பு , தம்மைத்தாமே பாதுகாத்துக் கொள்ளும் திறன் போன்றவையே எறும்புகளின் வெற்றிக்கான காரணங்களாக கருதப்படுகின்றன
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.