குளச்சல் சண்டை கி.பி 1741ம் ஆண்டு சூலை மாதம் 31ம் தேதி டச்சு கிழக்கிந்தியக் கம்பனி படைக்கும் திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மாவுக்கும் இடையே குளச்சல் துறைமுகத்தில் நடைபெற்ற சண்டை. இது டச்சு-திருவிதாங்கூர் போரின் ஒரு பகுதி. இச்சண்டையில் திருவிதாங்கூர் மன்னர் டச்சுப்படையை தோற்கடித்தார். டச்சுப் படை தளபதி டிலனாயை கைது செய்து பின்னர் தனது படைதளபதியாக நியமித்து கொண்டார். இப்போரை நினைவு கூரும் விதமாக குளச்சல் துறைமுகத்தில் வெற்றித் தூண் அமைக்கப்பட்டது. அது இன்றும் குளச்சலில் உள்ளது.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.