முருங்கைப்பூ: பித்தம் நீக்கும். வாந்தி குணமாகும். கண்கள் குளிர்ச்சி அடையும். காம உணர்வுவை அதிகமாக்கும்.
செந்தாழம்பூ: தலைவலி தீரும். கபம், ஜலதோசம், வாத நோய் ஆகியவை அகலும். உடலுக்கு அழகு அளிக்கும்.
செவ்வகந்திப்பூ: உடற்சுடு, மூக்கிலிருந்து இரத்தம் வடிதல் போன்ற நோய்களை குணமாக்கும்.
அகத்திப்பூ: பீடி,சிகரெட், சுருட்டு, உக்கா போன்றவற்றை பிடிப்பதால் ஏற்படுகின்ற விச சூட்டையும், பித்தத்தையும், வெயிலினால் உண்டாகும் சூட்டையும் நீக்கும்.
வாகைப்பூ: கசப்பு சுவையுடைய இப்பூ, சூட்டை நீக்கும்.
இலுப்பைப்பூ: நல்ல சுவையுடைய இப்பூவினால் பாம்பு விஷம், வாத நோய் குணமாகும்.
புளியம்பூ: மலையை சார்ந்த காட்டில் முளைக்கும் இப்பூவினால் பித்த நோய், சுவையின்மை வாந்தி ஆகியவை தீரும்.
மாதுளம்பூ: அனல் பித்தம், ஏப்பம், வாந்தி, இரத்த மூலம் ஆகிய நோய் நீங்கும்.இரத்தம் மிகுதியாகும்.உடலுக்கு ஊட்டம் அளிக்கும்.
வேப்பம்பூ: நாட்பட்ட பூவினால் ஏப்பம், சுவையின்மை, மலப்புழுக்கள், நாக்கு நோய்கள் ஜன்னி ஆகிய நோய்கள் தீரும்.
பனம்பூ: பல் நோய், சிறுகட்டு, வாத குன்மம், நாட்பட்ட சுரம் ஆகியவை தீரும்.
முள்முருக்கம்பூ: சூதக கட்டு (மாத விலக்கு தடை) நீங்கும்.
வாழைப்பூ: சீதபேதி, இரத்தமூலம், பால்வினை நோய், வெள்ளைப்பாடு, இருமல், உடற்சூடு, கைகால் எரிச்சல் ஆகியவை குணமாகும்.விந்து விருத்தியாகும்.
தென்னம்பூ: பால்வினை நோய்,வெள்ளை ஒழுக்கு, உடலில் உள் கொதிப்பு, இரத்த போக்கு, விஷக்கடி நோய்கள் நீங்கும்.
குருக்கத்திப்பூ: கசப்பும், இனிப்பும் சுவையுள்ள இப்பூவினால், தலைநோய், தாகம், கபம், புண், பித்தம், பல்வகை விஷக்கடி ஆகியவை குணமாகும்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.