Tuesday 9 October 2012

பெண்களின் மார்பகம், சில தெளிவுகளும், ஒரு தீர்வும்!

பெண்களின் மார்பகம், சில தெளிவுகளும், ஒரு தீர்வும்!

உயிர் வாழத் தேவையான வெப்பத்தை தன் உடலில் உற்பத்தி செய்து கொள்ளும் உயிரினங்கள் வெப்ப இரத்தப் பிராணிகள் எனப்படுகின்றன. இந்த வகையில் 29 தொகுதிகளில் மொத்தம் 5400 உயிரினங்களை நவீன அறிவியல் பட்டியலிட்டிருக்கிறது. இந்த பட்டியலில் மனிதனும் ஒருவன். இந்த உயிரினங்களுக்கு இருக்கும் மற்றொரு பொது அம்சம், இவை யாவும் பாலூட்டிகள் என்பதே. 
பாலூட்டுதல் அல்லது முலையூட்டுதல் எனப்படும் இந்த செயலே ஒரு உயிரினம் வாழையடி வாழையாய் பிழைத்துக் கிடப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. இந்த செயலுக்கான மனித உறுப்பான மார்பகம் பற்றிய சில புரிதல்களோடு, சித்தர் பெருமக்கள் அருளிய தீர்வொன்றினையும் பகிர்வதே இந்த பதிவின் நோக்கம்.

பிறந்த குழந்தைக்கு பாலூட்டுவதே மார்பகங்களின் செயல்பாடு. இவற்றின் அளவு பரம்பரை உடல் வாகு மற்றும் உண்ணும் உணவினைப் பொறுத்து மாறுபடும். எனினும் எல்லோருக்கும் வலது பக்க மார்பகத்தை விடவும் இடது பக்க மார்பகத்தின் அளவு சற்று பெரியதாக இருக்கும். இடது புற மார்பகத்தின் கீழே இதயம் அமைந்திருப்பதால் இடது மார்பகம் வலப்பக்கத்தை விட பெரியதாக தெரியும். கீழே உள்ள படம் மார்பகத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றம். 


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.