Tuesday 16 October 2012

நான்கு சூரியன்களுடன் புதிய கிரகம் கண்டுபி


நான்கு சூரியன்களுடன் புதிய கிரகம் ஒன்று விண்வெளி ஆராய்ச்சியாளர்களினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 5,000 ஒளியாண்டுகள் தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இக்கிரகத்திற்கு PH1 என பெயரிடப்பட்டுள்ளது.

பூமியைவிட ஆறுமடங்கு பெரியதான இக்கிரகத்தை சுற்றி நான்கு சூரியன்கள் இருப்பது, மிகவும் அரிதான ஒரு நிகழ்வாக விண்வெளியாளர் களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இக்கிரகம் குறித்த நான்கு சூரியன்களுக்கும் இடையில் அசையும் போது பட்டுத்தெறிக்கும் ஒளி விட்டு விட்டு பிரகாசிக்க செய்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு நான்கு சூரியன் களுடன் ஒரு கிரகம் கண்டுபிடிக்கப்பட்டு எமது விண்வெளி ஆராய்ச்சி துறையில் இதுவே முதன்முறை. அமெரிக்காவின் Yale பல்கலைக்கழக விண்வெளி பிரிவு மாணவர்கள் இருவர் தமது கிரக தேடுதல் வேட்டை திட்டத்தின் கீழ் இக்கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர்.

நான்கு சூரியன்கள் என்பதால் இக்கிரகத்திற்கு மனிதன் சென்றுவிட்டால், எப்போதும் மாலை நேரத்தில் இரண்டு சூரிய மறைவு தருணங்களையும், நள்ளிரவில் இரண்டு பிரகாசமான நட்சத்திரங்களையும் காண முடியும்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.