Tuesday 16 October 2012

டெங்குவை துரத்தும் சித்த மருத்துவம்!


''சித்த மருத்துவம் மூலமாக டெங்கு காய்ச்சலை குணப்படுத்த முடியும் என்று சொல்லும்'' சென்னையைச் சேர்ந்த பிரபல சித்த மருத்துவர் சிவராமன், 

''நிலவேம்புக் குடிநீர் (தூள்), ஆடாதொடை இலை (adhatoda vasica leaf) குடிநீர் (தூள்) ஆகியவை சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும். காலை உணவுக்கு முன்பு நிலவேம்புக் குடிநீர் (தூள்) 2 டீ ஸ்பூனை 200 மில்லி லிட்டர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, வடிகட்டி கிடைக்கும் கால் டம்ளர் கஷாயத்தைக் குடிப்பது நல்லது. இரவு உணவுக்கு முன்பு ஆடாதொடை இலை குடிநீர் (தூள்) 2 டீ ஸ்பூனை 200 மில்லி லிட்டர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி கிடைக்கும் கால் டம்ளர் கஷாயத்தைக் குடிக்க வேண்டும். ஒரு வாரத்துக்கு இப்படி குடிப்பது பலன் அளிக்கும். ஆடாதொடை இலையை அப்படியே அரைத்து சட்னி போல் சாப்பிடுவதும் நிவாரணம் அளிக்கும்.

வீட்டில் வேறு யாருக்காவது காய்ச்சல் ஏற்பட்டிருந்தால், ஆரோக்கியமாக உள்ளவர்கள்கூட காய்ச்சல் வராமல் தடுத்துக் கொள்ள இந்த மூலிகை கஷாயங்களைச் சாப்பிடுவது நல்லது. குணம் அடைந்த பிறகும்கூட நான்கு நாள்கள் கஷாயத்தைச் சாப்பிட வேண்டும்''

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.