முனைவர் என்ற தமிழ்ச் சொல்லுக்கு முதல் சொல் விளக்கம் அளித்தவர் இவர் தான் . “ முனைவன் கண்டது முதன்மை நூல் ஆகும்” என்ற தொல்காப்பியரின் வரிகளில் உள்ள சொற்களின் பொருள் வடிவத்தை எடுத்து முனைவர் என்ற வார்த்தையை வழங்கியவர் இவர் தான் !
‘டாக்டர்’(DOCTORATE) எனபதற்கு தமிழில் பண்டாரகர் என்ற சொல் உண்டு . பண்டாரகர் என்ற வார்த்தையை பயன்படுத்தியவர் தேவநேயப் பாவாணர் ஆவார்.ஆமாம் தமிழில் எப்பெயருக்கும் சமசுகிருதத்தைப் பின்பற்றுவோர் தமது அதிகாரத்தை பயன்படுத்தி காலம் காலமாக நம் மொழியை தூற்றுவது அவர்களின் வாடிக்கை மற்றும் அவர்களின் இயல்பு கூட !என்ன பெயர் அது? பண்டாரகர் , " பண்டாரம் " போல் இருக்கிறது என்று நகைத்தார்கள் . அதன் விளைவாக பிறந்த சொல் தான் முனைவர் . இந்த வார்த்தை தொன்மை தொல்காப்பிய வரிகளின் உள்ள பொருளை பற்றி பிறந்த சொல்லே முனைவர் .
இந்த முனைவர் என்ற தமிழ் சொற்களுக்கு சொந்தக்காரர் திரு இறையரசன் என்ற ஆசான் !ஆகையினால் இவரது பெயரும் இன்று முனைவர் தஞ்சை இறையரசன் என்றானது! இவர் இயற்றிய வார்த்தையை இன்று பரவலாக இணையத்தில் ,செய்தித் தாள்களில் , தமிழ் கட்டுரைகளில் பயன்படுத்திவருகின்றனர் .
சரி இவர் யார் என்ன செய்துகொண்டிருகிறார் என்று சற்று பார்ப்போம் .முனைவர் பா.இறையரசன் தஞ்சை மாவட்டத்தில் திருவையாற்றில் 15.03.1948 -இல் பிறந்தவர். கரந்தைப் புலவர் கல்லூரியிலும், திருவையாறு அரசர் கல்லூரியிலும் பணியாற்றியுள்ளார் இவர் , தஞ்சை மாவட்டம் பூண்டி புட்பம் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தஞ்சாவூர் தமிழ்ப் பேரவையின் செயலராக இருந்து தமிழ்வழிக்கல்வி , தமிழில் வழிபாடு , தமிழிசை , மது எதிர்ப்பு முதலிய களங்களில் பணியாற்றியவர் . எழுத்தேணி கல்வி தொண்டு அறக் கட்டளையின் செயலாளர். சென்னை தமிழ் எழுச்சிப் பேரவையின் செயலாளர்.
பேரரசன் இராசராசன் வரலாற்று ஆய்வுக்காகச் சிங்கபுரம் ( SINGAPORE ),கடாரம் ( மலேசியா ) , காம்போசம் ( கம்போடியா) முதலிய நாடுகள் சென்று ஆய்வுகளை நடத்தியவர் .இவர் எழுதிய தமிழ் நாட்டு வரலாறு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது . இயற்கை வாழ்வியலைப் பரப்பி வருகிறார். தமிழ் மண் பண்பாடு, வாழ்வியல் மீட்டெடுக்க நாட்டு மாடு வளர்க்கும் சண்முக, விதைநெல் செயராமன் ஆகியோர்க்கு உதவி வருகிறார். “டெங்கு” காய்ச்சலுக்குப் பப்பாளி இலைச் சாற்றைக் கொடுக்கவேண்டும் என்று பரப்பியவரும் இவரே! தொடர்ந்து இதழ்களிலும் , இணையத்திலும் எழுதி வருகிறார். குறிப்பாக இப்பொழுது புறநானூற்று வகுப்பை ( YOU TUBE ) எளிமையான முறைகளில் பதிந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது ...
இவ்வளவு நிகழ்வுகளுக்கு பின்னல் இருக்கும் இறையரசன் மற்றும் அவருடன் இணைந்து பல தோழமை தமிழ் அறிஞர்களும் தமிழுக்கு ஆற்றி வரும் பணி உலகம் அறியா.. நமக்கென்ன தெரியும் ..ஒன்று மட்டும் தான் தெரியும் powerstar தெரியும் , ரஜினி காந்த தெரியும் , த்ரிஷா தெரியும் , நயன்தார தெரியும் இவர்கள் முகம் மட்டும் தான் தெரியுமா ? நமக்கு ..அவர்கள் விரும்பும் உணவு வகைகள் , அவர்கள் போகும் வண்டிகள் , அவர்களின் அந்தரங்கள் , அவர்களின் பிறப்பு , ஏன் அவர்கள் வீட்டில் என்ன நாய் வளர்கிறார்கள் என்று தெரியும் .. ஆனால் இப்படிப்பட்ட தமிழ் அறிஞர்களை நமக்கு என்றும் தெரியாது !!!

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.