கனவுகள் இரவு முழுவதும் வருகின்றன என்றும், 90 நிமிட இடைவெளி விட்டு அவை தோன்றுகின்றன என்றும், சராசரியாக ஒரு இரவு உறக்கத்தில் நாலரை கனவுச் சம்பவங்கள் வருகின்றன என்றும் கண்டறியப் பட்டுள்ளன.
ஜப்பான் நாடு மட்டுமே மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுத கற்றுக் கொடுக்கிறது.
உலகில் உள்ள ஜீவராசிகளிலேயே அதன் உருவத்தோடு ஒப்பிடும்போது, மிகப் பெரிய மூளை எறும்புக்குத்தான் இருக்கிறது.
உடலில் இருக்க வேண்டிய நீரின் அளவில் இரண்டு சதவீதம் குறைந்தால், தாகம் எடுக்கும். 10 சதவீதத்துக்கு மேல் குறைந்தால், உயிருக்கே ஆபத்து ஏற்படும்.
உங்கள் உடம்பில் எவ்வளவு ரத்தம் உள்ளது என்று நீங்களே சொல்லி விடலாம். உங்கள் எடையை பன்னிரென்டால் வகுத்துக் கொள்ளுங்கள். வருவதுதான் ரத்தத்தின் எடை என்கிறார்கள் அமெரிக்க விஞ்ஞானிகள்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.