Sunday, 6 January 2013

அனிச்சம் மலர்


அனிச்சம் மலர் கபிலர் இயற்றிய குறிஞ்சிப் பாட்டில் கூறப்பட்டுள்ள 99 பூக்களில் ஒன்றாகும்.

இம்மலர் முகர்ந்ததும் வாடிவிடும் என்று (இலக்கியத்தில்) கருதப்பட்ட மலர்.

பெண்களை இம்மலரோடு குறிப்பிடுவது வழக்கமாகும்.

தன் கற்பை உயிரினும் பெரிதாய்ப் போற்றும் மங்கைகள் வேறொருவன் பார்வை தன் மேல் பட்டாலே தன்னுயிரை மாய்த்துக் கொள்வர். அதேபோல, இம்மலரும் முகர்ந்து பார்த்தாலே வாடும் தன்மைக் கொண்டதாகத் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, தமிழ்ப் பெண் குழந்தைகளுக்கு,

அபர்ணா, நிர்வாணா என்று கொச்சையாகப் பெயர் சூட்டுவதை விட்டொழித்து விட்டு,

அனிச்சா, அனிச்சையா என இம்மலரின் பெயரைச் சூட்டுவது மிகப் பொருத்தமாகவும், பொருள்மிக்கதாகவும் இருக்கும்.
இப்பெயர்களின் உட்பொருளானது அப்பெண் ஒரு கற்புக்கரசி என்பதாகும்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.