Thursday 20 September 2012

தாய்மை என்றால் என்ன??

தாய் என்றால் எங்கள் நினைவுக்கு வருகிற முதல் முகம் அம்மா, அன்பை மட்டுமே காட்டத் தெரிந்த அம்மாவின் முகம் தான் நினைவுக்கு வரும்.அன்னையின் அன்பில் தூய்மை இருக்கும், மாசு இருக்காது, பிரதி பலன் எதிர்பார்த்து எதையும் செய்ய மாட்டார்.சிறு வயதில் இருந்து குழந்தை செய்யும் ஒவ்வொரு தவறையும் மன்னிக்கும் மனப்பாங்கு உடையவர்.பொதுவாக யாராவது தவறு செய்தால் கோபம் தான் வரும், தூக்கி எறிந்து விட்டு எங்கள் வேலையை பார்க்க போய்விடுவோம், ஆனால் அன்னை அப்படி இல்லை,  அந்த தவறை சுட்டிக் காட்டி திருத்த முயற்சிப்பார்.அன்னையின் அன்புக்கு நிகர் அன்னை தான்.தாய்மையை பழிப்பவன் நிச்சயம் அவன் தாயின் அன்பை பெற்றவனாக இருக்கமாட்டன், அவன் தாய் கண்டிப்பாக வருந்தி இருப்பாள் இப்படி ஒரு மகனை பெற்று விட்டோமே என்று...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.