Sunday 30 September 2012

உட்காருவதைக் குறைத்தால் ஆயுளைக் கூட்டலாம்


ஒரு மனிதன் தினமும் 3 மணி நேரத்துக்குக் குறைவாக உட்கார்ந்திருந்தால், அவரது ஆயுட் காலம் அதிகரிக்கும் என்று கூறுகிறார்கள் விஞ்ஞானிகள்.

ஓடியாடி வேலை செய்வது, நடப்பது, உடற்பயிற்சி செய்வது, சுமைகளை தூக
்குவது, போன்ற வேலைகளை செய்வதால் நமது தசைகள் நன்கு பலம் பெறுகின்றன. இதனால், ஆரோக்கியம் அதிகரிக்கிறது. ஆயுளும் கூடுகிறது.

ஆனால் பல மணி நேரம் உட்கார்ந்து கொண்டிருப்பதால், தசைகள் பலவீனமாகின்றன. இதனால் ஆரோக்கியம் குறைந்து ஆயுளும் குறைவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

ஓடியாடி பணி செய்யும் நபர்களை விட, உட்கார்ந்து கொண்டே பணியாற்றுபவர்களுக்கு ஆரோக்கியக் குறைவு அதிகமாக உள்ளது என்பதும், ஆயுள் குறைவதும் ஆய்வில் தெரிய வந்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டே பணியாற்றும் நபர்கள், அவ்வப்போது எழுந்து நடந்து சென்று வந்து உட்காரலாம். இதுதான் ஆரோக்கியத்தைக் காக்கும் ஒரே வழியாகும். அல்லது வாரத்துக்கு ஒரு முறை வேகமாக நடப்பது, ஓடுவது போன்ற பயிற்சிகளை செய்து தசைகளை வலுவாக்கலாம்.

வீட்டில் இருப்பவர்கள் அதிக நேரம் அமர்ந்து கொண்டு டிவி பார்ப்பதை தவிர்த்துவிட்டு, தோட்டம் அமைப்பது, கை வேலை ஏதேனும் செய்வது, தூரத்தில் உள்ள கடைகளுக்கு நடந்து செல்வது போன்ற வேலைகளை செய்யலாம்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.