Sunday 30 September 2012

கர்ணனுக்கு ஏன் கோவிலில்லை?


Photo: கணவனுக்கு இழைக்க பட்ட
அநீதிக்காய்
ஒரு பாவமும் அறியாத மதுரை
மாநகரையே தீக்கிரையாக்கினாள்
கற்புக்கரசி கண்ணகி
சோழ நாடு பிறந்து
பாண்டி நாடு அழித்து
சேரநாட்டில் தெய்வமான
கண்ணகிக்கு கோவிலுண்டு
ஆனால்
சத்திரியனாய் பிறந்து
சத்திரியன் அல்லாதவனால்
வளர்க்க பட்டு
சத்திரியன் என்பதால்
குருவிடம் சாபம் பெற்று
சத்திரியன் இல்லையென்று
சொந்த ரத்தத்திடம் அவமானப்பட்டு
நட்பால் உயர்வுற்று
நட்பிற்கு இலக்கணமாகி
நட்புக்காய் சொந்தபந்தம் துறந்து
தலைமகன் என்னும் உரிமை விடுத்து
கவசகுண்டலம் தானம் தந்து
ரத்தமும் சதையும் பிளவுற்று
நட்பிற்கு தெய்வ அந்தஸ்து தந்த
கர்ணனுக்கு ஏன் கோவிலில்லை
கணவனுக்கு இழைக்க பட்ட
அநீதிக்காய்
ஒரு பாவமும் அறியாத மதுரை
மாநகரையே தீக்கிரையாக்கினாள்
கற்புக்கரசி கண்ணகி
சோழ நாடு பிறந்து
பாண்டி நாடு அழித்து
சேரநாட்டில் தெய்வமான
கண்ணகிக்கு கோவிலுண்டு
ஆனால்
சத்திரியனாய் பிறந்து
சத்திரியன் அல்லாதவனால்
வளர்க்க பட்டு
சத்திரியன் என்பதால்
குருவிடம் சாபம் பெற்று
சத்திரியன் இல்லையென்று
சொந்த ரத்தத்திடம் அவமானப்பட்டு
நட்பால் உயர்வுற்று
நட்பிற்கு இலக்கணமாகி
நட்புக்காய் சொந்தபந்தம் துறந்து
தலைமகன் என்னும் உரிமை விடுத்து
கவசகுண்டலம் தானம் தந்து
ரத்தமும் சதையும் பிளவுற்று
நட்பிற்கு தெய்வ அந்தஸ்து தந்த
கர்ணனுக்கு ஏன் கோவிலில்லை

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.